Tuesday, 4 August 2015

காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் குழாய்கள் பதிக்கும் பணி தீவிரம்

வடமதுரை,
திண்டுக்கல் மாவட்டத்தில் 2–ம் கட்டமாக காவிரி கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளை செயல்படுத்த குழாய்கள் பதிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் பெறப்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்காக கரூர் மாவட்டத்தில் காவிரி ஆற்றில் தக்கலை பகுதியில் காவிரி ஆற்றுப்படுகையில் குழாய் மூலம் நீர் உறிஞ்சப்பட்டு குஜிலியம்பாறை வழியாக திண்டுக்கல்லுக்கு தண்ணீர் கொண்டு வரப்படுகிறது.
அவ்வாறு தண்ணீர் கொண்டு வரும் போது வழியில் ஆங்காங்கே குடிநீரை சேகரிப்பதற்கு நீர்உந்து நிலையம் மற்றும் தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு உள்ளன. பின்னர் அந்த தண்ணீர் மாவட்டத்தில் மாநகராட்சி, ஊராட்சி நிர்வாகங்களுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளுக்கு பிரித்து அனுப்பப்படுகிறது. இந்த நிலையில் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் பெறப்படும் தண்ணீரின் அளவு போதுமானதாக இல்லை. இதனால் மாவட்டத்தில் பிற ஊராட்சி பகுதிகளில் குடிநீர் தேவை பூர்த்தி செய்வதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது.
    
2–ம் கட்ட திட்ட பணிகள் இதனைக் கருத்தில் கொண்டு தற்போது கரூர் மாவட்டம் காவிரி ஆற்று படுகையில் மாயனூர் என்னுமிடத்தில் இருந்து 2–ம் கட்டமாக காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவு செய்தது. இதையடுத்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் அந்த பகுதியில் ஆய்வு பணிகள் நடந்தது. இதைத் தொடர்ந்து காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் 2–ம் கட்ட பணிகளை செயல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் மாவட்டத்தில் நத்தம், ஆத்தூர் போன்ற பகுதிகள் குடிநீர் வினியோகம் செய்வதற்கு வழிவகை செய்யப்பட உள்ளது. இந்த குடிநீர் திட்ட பணிகளை தீவிரமாக செயல்படுத்தும் பணி வடமதுரை பகுதியில் நடைபெற்று வருகிறது. இதற்காக ராட்சத இரும்பு குழாய்கள் லாரிகளில் கொண்டு வந்து இறக்கி வைக்கப்பட்டு வருகின்றன.
இந்த திட்ட பணிகள் குறித்து குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர்களிடம் கேட்ட போது, கூட்டுக்குடிநீர் திட்டத்தில் 2–ம் கட்டமாக குழாய்கள் பதிக்கும் பணி விரைவில் தொடங்கப்பட்டு உள்ளன. இதற்காக பல்வேறு பகுதிகளில் குழாய்களை பதிப்பதற்காக லாரிகள் மூலம் கொண்டு வரப்பட்டு உள்ளது. இந்த குடிநீர் திட்ட பணிகள் 2 ஆண்டுகளில் நிறைவடையும் என்றனர்.

காந்திகிராமம் கஸ்தூரிபா மருத்துவமனையில் ஒரே பிரசவத்தில் பெண்ணுக்கு 3 குழந்தைகள் இன்னொரு பெண்ணுக்கு 5 கிலோ எடையில் குழந்தை பிறந்தது

சின்னாளபட்டி,
திண்டுக்கல்லை அடுத்த காந்திகிராமம் கஸ்தூரிபா மருத்துவமனையில் ஒரே பிரசவத்தில் பெண்ணுக்கு 3 குழந்தைகள் பிறந்தன.

     
ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள்தேனி மாவட்டம், கெங்குவார்பட்டியை சேர்ந்தவர் ரகுநாதன். இவருடைய மனைவி பிரேமா. கர்ப்பிணியான இவர் திண்டுக்கல் அருகே உள்ள காந்திகிராமம் கஸ்தூரிபா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவரை பரிசோதனை செய்த போது, கருப்பையில் 3 குழந்தைகள் இருப்பது தெரியவந்தது.
இந்தநிலையில் அவருக்கு நேற்று சுகப்பிரசவத்தில் 2 ஆண், ஒரு பெண் ஆகிய 3 குழந்தைகளும் பிறந்தன.
5 கிலோ எடையில் பிறந்த குழந்தை இதேபோல் தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜ்குமார். இவருடைய மனைவி சரண்யா (வயது 25). கர்ப்பிணியான இவரும் கடந்த 2 தினங்களுக்கு முன்பு பிரசவத்திற்காக காந்திகிராமம் கஸ்தூரிபா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வயிற்றில் குழந்தையின் எடை அதிகமாக இருப்பதாகவும், எனவே அறுவை சிகிச்சை மூலமே குழந்தையை பெற்றெடுக்க முடியும் என்றும் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து நேற்று அவருக்கு அறுவை சிகிச்சை நடந்தது. முதல் பிரசவத்திலேயே அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். அந்த குழந்தை 5 கிலோ எடை இருந்தது. தாயும், குழந்தையும் நலமாக உள்ளனர்.
மேற்கண்ட தகவலை கஸ்தூரிபா மருத்துவமனை ஆலோசகர் டாக்டர் கவுசல்யாதேவி தெரிவித்துள்ளார்.

சந்தைக்கு வியாபாரிகள் வராததால் மாடுகளை விற்க விவசாயிகள் திணறல்

ஒட்டன்சத்திரம்:ஒட்டன்சத்திரம் மாட்டுச் சந்தையில் வியாபாரிகள் வராததால், மாடுகளை விற்க முடியாமல் விவசாயிகள் திணறி வருகின்றனர்.தமிழ்நாட்டில் உள்ள மாட்டு வியாபாரிகள், லாரிகளில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை உள்ள மாடுகளை ஏற்றிச் செல்ல அனுமதி அளிக்க வேண்டும் என்று கூறி கடந்த ஜூலை 19 முதல் போராடி வருகின்றனர். அன்றிலிருந்து தமிழகத்தில் உள்ள சந்தைகளில் மாடுகள் வாங்குவதை தவிர்த்து வருகின்றனர். இதனால் வளர்ப்பு மாடுகளை விற்க சந்தைக்கு வரும் விவசாயிகள், விற்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். ஒட்டன்சத்திரம் நகராட்சிக்கு சொந்தமான மாட்டுச் சந்தை வாரந்தோறும் திங்களன்று கூடுகிறது. இதில் 2 ஆயிரம் மாடுகள் வரை விற்பனை செய்யப்படும். ஆனால் வியாபாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக நேற்று சந்தைக்கு சொற்ப அளவிலான மாடுகள் மட்டுமே வந்தன. கறவை மாடுகள் சிலவற்றை மட்டும் விவசாயிகள் தங்களுக்குள் விற்றுக் கொண்டனர். இருந்த போதிலும் பெரும்பாலான மாடுகளை விற்க முடியவில்லை.
விவசாயி ஆறுமுகம் (தில்லைக் கவுண்டன் புதூர்): விவசாயிகள் வளர்க்கும் மாடுகளை அவ்வப்போது விற்று தேவைகளை சமாளித்து வந்தனர். கடந்த 2 வாரங்களாக இங்கு கொண்டு வந்த மாடுகளை விற்க முடியவில்லை.தரகர் சின்னச்சாமி (நாயக்கனூர்): கடந்த 2 வாரங்களாக சந்தைக்கு வரும் மாடுகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது. இதனை நம்பி நூற்றுக்கணக்கானோர் பிழைத்து வருகிறோம். விரைவில் இதற்கு ஒரு சுமூகமான தீர்வு எட்டப்பட வேண்டும், என்றார். மாட்டு வியாபாரிகளின் கோரிக்கைகளை அரசு விரைவில் பரிசீலனை செய்து உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

டிசம்பருக்குள் "ஆன் லைனில்' கூட்டுறவு வங்கிகள்

திண்டுக்கல்:தமிழகத்தில் வரும் டிசம்பருக்குள் அனைத்து கூட்டுறவு வங்கிகளும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு, "ஆன் லைனில்' இணைக்கப்பட உள்ளது. தமிழகத்தின் 32 மாவட்டங்களில் 4 ,500 தொடக்க விவசாய கூட்டுறவு வங்கிகள் உள்ளன. இவை அனைத்தும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டுள்ளது. அனைத்து ஆவணங்களையும் கம்ப்யூட்டரில் பதிவு செய்து, பராமரிப்பதற்கு கூட்டுறவு பணியாளர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த வங்கிகள் அனைத்தும் வரும் டிசம்பருக்குள் ஆன் லைனில் இணைக்கப்பட உள்ளன. அனைத்து விவசாய தொடக்க கூட்டுறவு வங்கிகளிலும் கிட்டங்கிகள் அமைப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் 2,500 கிட்டங்கிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. இந்த கிட்டங்கிகளில் அறுவடை நேரத்தில் விலை இல்லாதபோது, தானியங்களை விவசாயிகள் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம். தானிய அடமான கடன் பெற்றுக் கொள்வதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
கூட்டுறவு இணைப்பதிவாளர் பழனி@வலு கூறியதாவது; விவசாய தொடக்க கூட்டுறவு வங்கிகளில் கம்ப்யூட்டர் மயமாக்குதல் இறுதி கட்டத்தை அடைந்து விட்டது. கிட்டங்கிகளை விவசாயிகள் பயன்படுத்தினால் விலை மதிப்பில் 75 சதவீதம் கடன் வழங்கப்படும். விவசாயிகளுக்கு தேவையான அனைத்து உரங்களும் வழங்கப்படும். வாடிக்கையாளர்களுக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளை போல பணிகளை துரிதப்படுத்த உள்ளோம், என்றார்.

ஆதார் புகைப்படம் எடுக்கும் பணி நிறுத்தம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி தற்காலிகமாக ஆக., 5 முதல் நிறுத்தி வைக்கப்படுகிறது.கலெக்டர் ஹரிஹரன் கூறியதாவது: திண்டுக்கல் மாவட்டத்தில் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி 2014 நவ.,1 முதல்
நடக்கிறது. இப்பணி கலெக்டர் அலுவலகம், தாலுகா, மாநகராட்சி, நகராட்சி அலுவலக நிரந்தர
மையங்களில் நடக்கின்றன. இந்த பணி தற்காலிகமாக ஆக., 5 முதல் ஆக., 14 வரை நிறுத்தி வைக்கப்படுகிறது. இந்த நாட்களில் புகைப்படம் எடுக்க "டோக்கன்' பெற்றோருக்கு பின்பு தேதி அறிவிக்கப்படும். முதியோர் உதவித்தொகை பெறும் பயனாளிகளுக்கு ஆதார் அட்டைக்கான புகைப்படம் எடுக்கும் ஆக., 5 முதல் ஆக., 14 வரை நடக்கிறது. இந்த பணி சமுதாய கூடங்கள், அரசு பள்ளிகளில் நடக்கும், என்றார்.

ஆடிப்பெருக்கு விழாவில் தேங்காய் சுடும் நிகழ்ச்சி

பழநி:ஆடிப்பெருக்கு திருநாளை முன்னிட்டு பழநி கோதைமங்கலம், பாலசமுத்திரம், அ.கலையம்புத்தூர், வண்டிவாய்க்கால் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பெண்கள் முளைப்பாரி ஊர்வலமாக வந்தனர். அருகேயுள்ள சண்முகநதி ஆற்றங்கரையில் களிமண் எடுத்து அதில் சப்த கன்னிமார்களை வடிவமைத்து அதற்கு சந்தனம், பொட்டு, மாலை அணிவித்தனர்.
பச்சரிசியில் சர்க்கரை கலந்து, தேங்காய் பழங்கள், மஞ்சள் கயிறு வைத்து பூஜை செய்தனர். சிறுவர்கள், பெரியவர்கள் தேங்காயை நார் இல்லாமல் உரித்து தண்ணீரை எடுத்துவிட்டு அவல், கடலை, பாசிப்பயறு, எள்ளு, நாட்டுசர்க்கரை நிரப்பி மூடினர். அத்தேங்காயை தீயில் சுட்டு எடுத்து அதிலுள்ள பொருட்களை சுவாமிக்கு படைத்து வழிபட்டனர். பின் சுவாமிக்கு படைத்த பொருட்களை நதியில் கரைத்தனர்.
ஒட்டன்சத்திரம்: ஆடிப்பெருக்கை முன்னிட்டு, விருப்பாட்சி "தலையூத்து 'அருவியில் மக்கள் நீராடி மகிழ்ந்தனர்.
மேற்குமலை தொடர்ச்சியில், ஒட்டன்சத்திரம் அருகி<லுள்ள விருப்பாட்சி பகுதியில் தலையூத்து அருவி உள்ளது. பரப்பலாறு அணையில் இருந்து திறந்து விடப்படும் நீர் தலையூத்து அருவியாக மாறி பின்னர் நங்காஞ்சி ஆறாக பாய்கிறது. இங்கு வருடந்தோறும் ஆடிப்பெருக்கை(ஆடி18) முன்னிட்டு சுற்று வட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான மக்கள் அருவியில் நீராடிச் செல்வர்.
கடந்த 2 ஆண்டுகளாக பருவமழை பொய்ததால் பரப்பலாறு அணை நீரின்றி வறண்டிருந்தது. இதனால் அப்போது இப்பகுதியில் ஆடிப்பெருக்கு விழா உற்சாகமின்றி காணப்பட்டது. தற்போது பரப்பலாறு அணையில் நீர் உள்ளதால், வழக்கம் போல் இந்த ஆண்டும் புதுமணத் தம்பதிகள் அருவியில் நீராடி, புத்தாடை அணிந்து மலை அடிவார கோயிலில் வழிபாடு நடத்தினர்.
இதேபோல் ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயிலில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. ஒட்டன்சத்திரம் அருகிலுள்ள குழந்தைவேலப்பர் கோயிலிலும் முருகப்பெருமானை வழிபட்டனர்.
கொடைக்கானல்: கொடைக்கானல் பத்ரகாளியம்மன் கோவிலில் ஆடி பதினெட்டாம் நாள் கொண்டாட்டம் நடந்தது. பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், தாலிகயிறு, போன்ற பிரசாதங்கள் வழங்கினர். அம்மன் சிறப்பு அலங்கார தோற்றத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கொடைக்கானல் நகர் மற்றும் கிராம பகுதியிலிருந்து திரளான பக்தர்கள் அம்மனை வணங்கினர்.

பழநி அருகே மாட்டுத்தாவணிகாங்கேயம் காளை ரூ. 2 லட்சம்

தொப்பம்பட்டி: பழநி அருகே தொப்பம்பட்டி மாட்டுத்தாவணி சந்தையில் ரூ.30ஆயிரம் முதல் 2 லட்ச ரூபாய் வரை மாடுகள் விற்கப்படுகிறது. தொப்பம்பட்டி அங்காளம்மன் கோயிலில் ஆண்டுதோறும் ஆடித்திருவிழாவில் மாட்டுத்தாவணி நடக்கிறது. நேற்றுமுன்தினம் (ஆக.,2 முதல் 5 வரை) துவங்கி தொடர்ந்து 4 நாட்கள் நடக்கிறது. இதற்காக இரண்டு தினங்களக்கு முன்பாகவே மாடுகள் வரத்து வங்கிவிட்டன. இதில், காங்கேயம், பொள்ளாச்சி, தாராபுரம், ஒட்டன்சத்திரம், உசிலம்பட்டி, உடுமலை உள்பட பல்வேறு இடங்களில் மாடுகளை கொண்டுவந்திருந்தனர். மாட்டுத்தாவணியில் மாடுகளுக்கான பல வண்ணக்கயிறு, சாட்டை, பெயின்ட் மற்றும் மண்வெட்டி, அருவாள்போன்ற விவசாயப் பொருட்கள் விற்கப்படுகிறது. அதிகபட்சமாக ரூ.2 லட்சம் ரூபாய் வரை காங்கேயம் காளைகள் விற்பனைக்கு வந்துள்ளன.
உசிலம்பட்டி கருப்பசாமி கூறுகையில்,"" இவ்வாண்டு இரண்டு காங்கேயம் காளைகள் கொண்டுவந்துள்ளேன். விலை ரூ.1.25 லட்சம் முதல் ரூ.1.50 வரை விற்கும் என எதிர்பார்க்கிறோம்,'' என்றார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் பாலூட்டும் அறைகள் திறப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் மாநகராட்சி சார்பில், பாலூட்டும் அறை துவக்கப்பட்டது. திண்டுக்கல் பஸ்ஸ்டாண்டில் பாலூட்டும் அறையை மாவட்ட கலெக்டர் ஹரிஹரன் துவக்கினார். மேயர் மருதராஜ், முன்னிலை வகித்தார். நலப்பணிகள் இணை இயக்குனர் ரவிக்கலா, சுகாதார துணை இயக்குனர் சவுடம்மாள், மருத்துவ அதிகாரிகள் பங்கேற்றனர். மேயர் மருதராஜ் கூறுகையில், "தாய்ப்பாலூட்டும் அறையில் பாத்ரூம், குறைந்தபட்சம் ஐந்து சேர்கள், குப்பைத்தொட்டி, கைகழுவும் வசதி, பேன் வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது, என்றார்.

பழநியில் நடந்த நிகழ்ச்சியில் நகராட்சி கமிஷனர் (பொ) காளிமுத்து, வேணுகோபாலு எம்.எல்.ஏ., மற்றும் நகராட்சி தலைமைபொறியாளர் செந்தில்குமார் பங்கேற்றனர். ஒட்டன்சத்திரத்தில் நகராட்சி தலைவர் பழனியம்மாள், கமிஷனர் சவுந்திரராஜன், அ.தி.மு.க., தொகுதி செயலாளர் பாலசுப்பிரமணி, நகர செயலாளர் <<உதயம்ராமசாமி பங்கேற்றனர்.
கொடைக்கானலில் நகர் மன்ற தலைவர் ஸ்ரீதர் திறந்து வைத்தார். அ.தி.மு.க., நகர செயலாளர் ஜான் தாமஸ், ஒன்றிய துணைத்தலைவர் பொன்னுத்துரை கலந்து கொண்டனர்.
சின்னாளப்பட்டி: தமிழகத்தில் பாலூட்டும் அறைகளை வீடியோ கான்பரன்ஸ் முறையில் சென்னையில் இருந்து முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

அதற்குமுன்பாக, சின்னாளபட்டி பஸ் ஸ்டாண்டில் அறையை, காலை 10.30 மணிக்கு பேரூராட்சி தலைவர் முருகன் திறந்து வைத்தார். முதல்வர் துவக்கும் முன்பே அவர் திறந்து விட்டதாக, சர்ச்சை ஏற்பட்டுள்ளது. சின்னாளபட்டி பேரூராட்சி தலைவர் முருகன் கூறும்போது,"" பொது சுகாதார துறையினர் 20க்கும் மேற்பட்ட பாலூட்டும் பெண்களை நிகழ்ச்சிக்காக வரவழைத்து விட்டனர். அவர்களை நீண்டநேரம் காக்க வைக்க இயலாது என வட்டார மருத்துவ அதிகாரி அவசரப்படுத்தியதால் கத்தரித்து திறப்பு விழா செய்யப்பட்டது,'' என்றார்.

10 ஊராட்சிகள் திண்டுக்கல்லுடன் இணைய கவுன்சில் கூட்டத்தில் இன்று தீர்மானம்

திண்டுக்கல்:திண்டுக்கல் மாநகராட்சியுடன் இணைவதற்கு 10 ஊராட்சிகள் ஒப்புதல் அளித்துள்ளன. இதுபற்றிய தீர்மானம் இன்று நடைபெற உள்ள கவுன்சில் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.
1866ல் நவம்பர் 1ல், தேர்வு நிலை பேரூராட்சிகளாக இருந்த பகுதிகள், 29 நகராட்சிகளாக அறிவிக்கப்பட்டன. அப்போது திண்டுக்கல், நகராட்சியாக தரம் உயர்ந்தது. அப்போது ஆண்டு வருவாய் ரூ.10 ஆயிரத்து 450. ஐந்து கிலோ மீட்டர் பரப்பளவில் நகரம் இருந்தது.
பின், நூற்றாண்டு விழா கொண்டாடிய திண்டுக்கல் நகராட்சி, 14.1 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் ரூ.1 லட்சம் மக்கள் தொகையுடன், ஆண்டு வருவாய் ரூ.23 லட்சம் கொண்டதாக உயர்ந்தது. பின், 1988 ஜன., 23ல் சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்த அரசாணை பிறப்பிக்கப்பட்டது. பின், 1988ல் ஏப்., 1ல் 48 வார்டுகளாக சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்ந்தது.
அதற்குப்பின், கடந்த 2014 பிப்., 19ல் மாநகராட்சியாக தரம் உயர்ந்தது. தற்போது, மாநகராட்சி 110.20 சதுர கிலோ மீட்டரில், 3 லட்சத்து 23 ஆயிரத்து 868 பேர் வசிக்கின்றனர். இந்நிலையில் மாநகராட்சியின் எல்லை விரிவாக்கத்திற்காக திண்டுக்கல் நகரை சுற்றியுள்ள 10 ஊராட்சிகளையும் இணைக்க, "அரசிடம் ஒப்புதல் பெறுவதற்கான' சிறப்பு தீர்மானம் இன்று நடைபெறும் கவுன்சில் கூட்டத்தில் நடைபெற உள்ளது.
மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: திண்டுக்கல் நகரத்தை சுற்றியுள்ள 10 ஊராட்சிகள் மாநகராட்சியுடன் இணைய உள்ளது. இதற்கான அரசின் ஒப்புதல் பெற ஏற்கனவே பல்வேறு ஆய்வுகள் முடிக்கப்பட்டு, அந்தந்த ஊராட்சிகளில் ஒப்புதல் பெறப்பட்டது. ஒருசில ஊராட்சிகள் எதிர்த்தன.
அந்த நிர்வாகத்திடமும் முறைப்படி ஒப்புதல் பெற்றுள்ளோம். விரைவில் அரசாணை பெறவே இந்த சிறப்பு தீர்மானம். அதுமட்டுமின்றி, "ஸ்மார்ட் சிட்டி' திட்டத்திற்கு இன்று நடக்கும் கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் பெற தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. ஊராட்சிகள் இணைந்தால் மாநகராட்சியின் எல்லை 127.66 சதுர கி.மீ., பரப்பளவாக அதிகரிக்கும், என்றனர்.

Sunday, 17 May 2015

திண்டுக்கல் அருகே நான்கு வழிச்சாலையில் கான்கிரீட் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிவதால் விபத்து அபாயம்


திண்டுக்கல் அருகே நான்கு வழிச்சாலையில், கான்கிரீட் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிவதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
       

      
4 வழிச்சாலை காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்ட பிறகு, சாலை போக்குவரத்தில் ஒரு புரட்சி ஏற்பட்டது என்று சொல்லலாம். வாகனங்களின் வேகம் அதிகரித்து, பயண நேரம் கணிசமாக குறைந்திருக்கிறது என்பதை பாராட்டாமல் இருக்க முடியாது. பொதுமக்களுக்கு வரப்பிரசாதமாக இந்த நான்கு வழிச்சாலை அமைந்திருக்கிறது.
தமிழகத்தில் அதிக அளவு 4 வழிச்சாலையை கொண்ட மாவட்டங்களில் திண்டுக்கல் மாவட்டமும் ஒன்றாகும். திண்டுக்கல்லில் இருந்து திருச்சி, சேலம், மதுரை ஆகிய இடங்களுக்கு நான்கு வழிச்சாலைகள் உள்ளன. இந்த சாலைகளில், மின்னல் வேகத்தில் வாகனங்கள் சென்று வருகின்றன. அதேநேரத்தில் அவ்வப்போது சிறிய, பெரிய விபத்துகளும் நடந்து வருகிறது.
வெளியே தெரியும் கம்பிகள் எந்தவொரு சாலையாக இருந்தாலும் பராமரிப்பு என்பது அவசியம். இல்லையெனில் அவை பொதுமக்களுக்கு பயன் இல்லாமல் போய் விடும். அப்படியொரு நிலைமை, திண்டுக்கல்–திருச்சி நான்கு வழிச்சாலைக்கு ஏற்பட்டு கொண்டிருக்கிறது. இந்த சாலையில் கலெக்டர் அலுவலகம் அருகே, அஞ்சலி ரவுண்டானாவில் ரெயில்வே மேம்பாலம் உள்ளது. அதன் மேல்பகுதியில் உள்ள சாலை பராமரிப்பு இன்றி பரிதாபமாக காட்சி அளிக்கிறது.
சாலையின் மையப்பகுதியில் போடப்பட்டுள்ள கான்கிரீட் பெயர்ந்து போய் இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதன் காரணமாக, அந்த சாலையை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.
விபத்து அபாயம் அத்துடன் விபத்து அபாயமும் ஏற்பட்டுள்ளது. அவ்வப்போது சிறிய விபத்துகள் அரங்கேறி கொண்டிருக்கின்றன. வேகமாக செல்லும் வாகனங்கள் பள்ளத்தில் இறங்கி ஏறுவதால் நிலைதடுமாறி கவிழும் சூழல் நிலவுகிறது.
தற்போது சென்னை, திருச்சியில் இருந்து பழனி மற்றும் கொடைக்கானல் செல்லும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் இந்த சாலையை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். எனவே பெரிய விபத்து ஏற்படும் வரை காத்திருக்காமல், பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு நான்கு வழிச்சாலை பராமரிப்பு பணியில் சம்பந்தப்பட்ட துறையினர் ஈடுபட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

ஒட்டன்சத்திரம் பகுதியில் விடிய, விடிய பலத்த மழை வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது

        

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் விடிய விடிய பலத்த மழை பெய்தது. இதனால் ஆறு மற்றும் ஓடைகளில் வெள்ளப் பெருககெடுத்து காற்றாற்று வெள்ளம் கரை புரண்டு ஓடியது. இதனால் கிராமங்களில உள்ள வீடுகளில் மழை வெள்ளம் சூழ்ந்தது. ஒட்டன்சத்திரம் சுற்றுப்புற பகுதிகளான முத்துநாயககன்பட்டி, புலியூர்நத்தம், இடையகோட்டை, கேதையறும்பு, கள்ளிமந்தயம், அத்திககோம்பை, சட்டையப்பனூர், அம்பிளிககை, பெரியகோட்டை உள்ளிட்ட அனைத்து கிராம பகுதிகளிலும் நள்ளிரவு 1 மணி முதல் கனமழை பெய்தது. இதனால் விவசாய நிலங்களில தண்ணீர் தேங்கி உள்ளது. இடையகோட்டை நங்காஞ்சி அணைக்கு முத்துநாயககன்பட்டி, குளிப்பட்டி வழியாக செல்லும் ஆற்றில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அதேபோல் புலியூர்நத்தம், சட்டையப்பனூர், சாலைப்புது£ர், அத்திககோம்பை ஆகிய பகுதிகளிலும் வீடுகளுககுள் வெள்ளம் புகுந்துள்ளது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த மககள் இரவில் வீட்டிற்குள் செல்ல முடியாமல் தவித்தனர். பரப்பலாறு அணையில் நேற்று காலை நிலவரப்படி 11.6 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது அதே போல் அணையின் மொத்த கொள்ளளவான 90 அடியில் தற்போது 83.74 அடி தண்ணீர் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக போதிய மழை பெய்யாத நிலையிலும், கடந்த 4 ஆண்டுகளாக கடுமையான வறட்சி நிலவி வந்த நிலையில் இப்போது பெய்துள்ள மழை விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பழனி பகுதியில் தொடர்மழையால் அணைகளில் நீர்மட்டம் உயருகிறது


பழனி பகுதிகளில் தொடர் மழை காரணமாக அணைகளில் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.
வரதமாநதி அணை
      





தமிழகம் முழுவதும் பெய்து வரும் மழையால் கோடை வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவி வருகிறது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்திலும் பழனி, கொடைக்கானல், வத்தலக்குண்டு, நத்தம், கொடைரோடு உள்பட பல்வேறு பகுதிகளிலும் பெய்து வரும் பலத்த மழையால் கண்மாய்கள், குளங்கள் ஓரளவு நிரம்பி உள்ளன.
அத்துடன் பழனி பகுதிகளில் உள்ள அணைகளான வரதமாநதி அணை, பாலாறு–பொருந்தலாறு அணை, குதிரையாறு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. குறிப்பாக வரதமாநதி அணை ஓரிரு நாட்களில் நிரம்பும் நிலை ஏற்பட்டு உள்ளது. பழனியிலிருந்து கொடைக்கானல் செல்லும் வழியில் அமைந்துள்ள வரதமாநதி அணையின் உயரம் 66.5 அடியாகும்.
தற்போது அணையில் 56.1 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு நீர் வரத்து 51 கன அடியாக இருக்கிறது. அணையில் இருந்து 2 கன அடிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
குடிநீர் பற்றாக்குறை அதேபோல திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அணைகளில் மிக பெரியது பழனியை அடுத்துள்ள பாலாறு–பொருந்தலாறு அணை. இதன் உயரம் 65 அடியாகும். இதில் தற்போது 30.97 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ள நிலையில், அணைக்கு நீர் வரத்து 94 கன அடியாக உள்ளது. 12 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
பழனியை அடுத்த பாப்பம்பட்டி அருகே அமைந்துள்ளது குதிரையாறு அணை. இதன் உயரம் 80 அடி. இதில் தற்போது 45.8 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. இங்கு நீரின் வரத்து 4 கன அடியாகவும், வெளியேற்றப்படுவது 3 கன அடியாகவும் உள்ளது. இந்த பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் பழனி நகருக்கு குடிநீர் பற்றாக்குறை நீங்கியுள்ளது. இதன் மூலம் அனைத்து வார்டுகளுக்கும் தினசரி குடிநீர் வழங்கலாம் என பழனி நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பழனி–கொடைக்கானல் சாலையில் பாறைகள் சரிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு சுற்றுலா பயணிகள் அவதி

பழனி–கொடைக்கானல் சாலையில் பாறைகள் சரிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் அவதி அடைந்தனர்.
தொடர் மழை திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு தொடர்ந்து பலத்த மழை பெய்தது. இந்த பலத்த மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் உள்ள குளங்கள் நிரம்பி வருகின்றன. இந்த நிலையில் பழனியில் இருந்து கொடைக்கானல் செல்லும் சாலையில் 27 கிலோ மீட்டர் தூரத்தில் சவரிக்காடு உள்ளது.
இங்கு பெய்த பலத்த மழை காரணமாக பாறைகள் சரிந்து ரோட்டில் விழுந்தன. மேலும் பல்வேறு இடங்களில் பெரிய மரங்களும் முறிந்து விழுந்தன. விடிய, விடிய மழை பெய்ததால் மழைப்பகுதியில் உள்ள மண் அரிக்கப்பட்டு ரோட்டில் மலைபோல் குவிந்தது.
போக்குவரத்து பாதிப்பு
இதனால் பழனியில் இருந்து கொடைக்கானல் செல்லும் போக்குவரத்து நேற்று காலை 7 மணி முதல் பாதிக்கப்பட்டது. இதனால் பழனியில் இருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்ற பயணிகள் பாதிக்கப்பட்டனர். இவர்கள் சென்ற கார்கள் பல கிலோமீட்டர் தூரத்துக்கு அணிவகுத்து நின்றன.
தகவல் அறிந்ததும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும், ஊழியர்களும் பொக்லைன் எந்திரங்களுடன் சென்றனர். பின்னர் சாலைகளில் உள்ள பாறைகளையும், மணல்களையும் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 4½ மணி நேரம் இந்த பணிகள் நடந்தது. அதன்பின்னர் போக்குவரத்து சீரானது.
இதேபோன்று பழனியில் இருந்து 17 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வட்டமலை பகுதியிலும் சாலையில் பாறைகள் உருண்டு விழுந்தன. இந்த பகுதியில் உள்ள பாறைகளையும் நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் அப்புறப்படுத்தினார்கள்.
சீரமைக்கும் பணிகள் இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் ஜெயபால் கூறுகையில், பழனியில் இருந்து கொடைக்கானல் செல்லும் சாலையில் சில இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு இருந்தது. இதை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு சரி செய்யப்பட்டது. தொடர்ந்து இந்த பகுதியை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். மண்சரிந்து விழும் பகுதியை கண்டறிந்து அதை அப்புறப்படுத்தும் பணியிலும் ஈடுபட்டு வருகிறார்கள். மேற்கண்டவாறு அவர் கூறினார்.

திண்டுக்கல் நகரில் விடிய, விடிய கொட்டி தீர்த்த மழை வீடு இடிந்ததில் பெண் காயம்


திண்டுக்கல்லில் விடிய, விடிய பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதில் வீடு இடிந்து விழுந்ததில் பெண் காயம் அடைந்தார்.
விடிய, விடிய மழை சுட்டெரிக்கும் வெயிலின் உச்சக்கட்டமாக கருதப்படுகிற அக்னி நட்சத்திரம் கடந்த 4–ந்தேதி தொடங்கியது. அன்றைய தினத்தில் இருந்து தற்போது வரை திண்டுக்கல் நகர் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழையும், சாரல் மழையும் பெய்து வருகிறது. திண்டுக்கல்லில், நேற்று முன்தினம் வழக்கம் போல பலத்த மழை கொட்டி தீர்த்தது.
நள்ளிரவு பெய்ய தொடங்கிய மழை விடிய, விடிய நீடித்தது. இதனால் நகரின் முக்கிய சாலைகள், தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. சில இடங்களில், சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு மழைநீரும், கழிவுநீரும் கலந்து தெருக்களில் வழிந்தோடின. திண்டுக்கல் திருமலைச்சாமிபுரம் உள்ளிட்ட நகரின் தாழ்வான பகுதிகளில் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்தது.
மின்சாரம் துண்டிப்புபலத்த மழை பெய்து கொண்டிருக்கும் போது அவ்வப்போது இடி–மின்னல் இடித்தது. சூறாவளி காற்றும் அடித்தது. இதனால் நகரின் பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. உழவு செய்த ஒரு வயல் நாற்று நடுவதற்கு தயாராக இருப்பதை போல, திண்டுக்கல் காந்திமார்க்கெட் சேறும் சகதியுமாக பரிதாபமாக காட்சி அளிக்கிறது.
திண்டுக்கல் நகரில் உள்ள சாலையோர பள்ளங்களில் மழைநீர் நிரம்பி வழிந்தது. நகரில் உள்ள குண்டும், குழியுமான சாலைகளில் மழைநீர் தேங்கி நின்றது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர். தண்ணீரை பீய்ச்சி அடித்தபடி வாகனங்கள் சென்றன. திண்டுக்கல் அருகே மாங்கரை பிரிவில் சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த ஒரு மரம் சரிந்து விழுந்தது.
                   


மேற்கூரை விழுந்து பெண் காயம் திண்டுக்கல் யானைத்தெப்பம் காந்திஜிபுதுரோட்டை சேர்ந்த நடராஜன், அவரது மனைவி பூமதி (வயது 37) மற்றும் குடும்பத்தினர் நள்ளிரவில் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது ஓடுகளால் வேயப்பட்ட வீட்டின் மேற்கூரை திடீரென சரிந்து விழுந்தது.
பூமதியின் தலையில் சில ஓடுகள் விழுந்தன. இதில் அவர் காயம் அடைந்தார். திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் அளிக்கப்பட்ட சிகிச்சைக்கு பிறகு அவர் வீடு திரும்பினார்.
638 மி.மீட்டர் மழை பதிவு திண்டுக்கல் நகர் மட்டுமின்றி மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் விடிய, விடிய மழை கொட்டி தீர்த்தது. நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை பெய்த மழை அளவு (மி.மீட்டரில்) விவரம் வருமாறு:–
திண்டுக்கல்–40.40, கொடைக்கானல்–1.50, நத்தம்–2.20, நிலக்கோட்டை–4.40, பழனி–47, வேடசந்தூர்–84.70, சத்திரப்பட்டி–160, வேடசந்தூர் புகையிலை ஆராய்ச்சி மையம்–74.40, காமாட்சிபுரம்–224 மி.மீட்டரும் மழை பதிவாகி இருக்கிறது. மாவட்டம் முழுவதும் 638.60 மி.மீட்டர் மழையும், சராசரியாக 63.86 மி.மீட்டர் மழையும் பெய்துள்ளது.

நததம அருகே மலையடிவாரத்தில் பாழடைந்த கிணற்றில் விழுந்த 6 காட்டெருமைகள் 3 எருமைகள் பலியான பரிதாபம்


நத்தம் அருகே மலையடிவாரத்தில் பாழடைந்த கிணற்றில் விழுந்த 6 காட்டெருமைகள் தவறி விழுந்தன. அவற்றில் 3 எருமைகள் பரிதாபமாக இறந்தன.

            

காட்டெருமைகள் திண்டுககல் மாவட்டம நததம அருகே அழகர்மலை அடிவாரத்தில உளளது படடணமபடடி கராமம. இநத மலைப்பகுதியில காடடெருமைகள உள்ளிடட ஏராளமான வனவிலஙகுகள காணப்படுகின்றன. அவை அவ்வப்போது தண்ணீருக்காக கிராம பகுதிகளுக்கு வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் சம்பவத்தன்று மலைப்பகுதியில் இருந்து 6 காட்டெருமைகள் மலையடிவார பகுதிக்கு வந்துள்ளன.
தண்ணீர் தேடி அலைந்த அந்த காட்டெருமைகள் அந்த பகுதியில் உள்ள ஒரு பாழடைந்த கிணற்றுக்குள் ஒவ்வொன்றாக தவற விழுநதுள்ளன. இதற்கிடையே நேற்று அநத பகுதியில் விறகு சேகரிப்பதற்காக சென்ற சிலர், துர்நாற்றம் வசுவதை கண்டு கிணற்றுக்குள் பார்த்தனர். அப்போது உள்ளே காட்டெருமைகள் விழுந்து கிடப்பது தெரியவந்தது.
இறந்து கிடந்தன
இதுகுறித்து அவர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மாவடட வன அதிகாரி சமபத் ஆலோசனையின் பேரில் வேம்பரள வனததுறை அதகார பகவதி மேற்பார்வையில் வன அலுவலர்ள் சமபவ இடததிறகு வந்தனர். அப்போது கிணற்றுக்குள் 3 காட்டெருமைகள் இறந்து கிடப்பதும், மேலும் 3 காட்டெருமைகள் உயிருடன் இருப்பதும் தெரியவந்தது.
உடனே வனத்துறை அதிகாரிகள் நத்தம் தீயணைப்பு படையினரின் உதவியுடன் கிணற்றுக்குள் உயிருடன் இருந்த 3 காட்டெருமைகளை மீட்கும் முயறசியில் ஈடுபட்டனர். ஆனால் அது பலனளிக்கவில்லை. பன்னர் பொக்லைன் எநதரம் மூலம் அந்த கிணறறன் பககவாடடு சுவர் இடிக்கப்பட்டு மண் நிரப்பப்பட்டது.
மலைப்பகுதிக்குள் சென்றன இதையடுத்து அந்த காட்டெருமைகள மண்குவியல வழயாக கிணற்றுக்குள் இருந்து வெளியே வந்தன. பின்னர் அவை அங்கிருந்து துள்ளி குதித்து மலைபபகுதிககுள் சென்றன. பின்னர் கிணற்றுக்குள் இறநது கிடநத 3 காடடெருமைகளின் உடல்களையும் வனத்துறையினர் மீட்டனர். அவை அரசு கால்நடை மருததுவரால் பரசோதனை செயயபபடடு அந்த பகுதியிலேயே புதைக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறதது அபபகுதியை சேர்ந்த விவசாயி முருகேசன் என்பவர் கூறும்போது, ‘‘அழகர்மலை பகுதியில் காடடெருமைகளின் நடமாடடம அதிகமாக உளளது. அவற்றுக்கு தேவையான தணணர் மலைப்பகுதியில் கிடைப்பதில்லை. இதனால் அவை அடிக்கடி ஊருக்குள் வலம் வருகின்றன. எனவே மாவட்ட நர்வாகம் வவிலங்குகளுக்கு தேவையான தண்ணீரை மலைப்பகுதியில் தடுபபணைகள கடடி தேகக வைக்க நடவடிக்கை எடுக்க வேணடும’’ எனறார்.

ஒட்டன்சத்திரம் செக்போஸ்ட்டில் பயணிகள் நிழற்கூரை அவசியம்

ஒட்டன்சத்திரம், :மூன்று ரோடுகளின் சந்திப்பு பகுதியான ஒட்டன்சத்திரம் செக்போஸ்ட்
பகுதியில் நிழற்கூரை வசதி இல்லாததால் பயணிகள் அவதிப்படுகின்றனர்.ஒட்டன்சத்திரம் செக்போஸ்ட் பஸ் நிறுத்தமானது, திண்டுக்கல் ரோடு, பழநி ரோடு மற்றும் வேடசந்தூர் ரோடு ஆகியவை சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது. இதனை சுற்றி அண்ணாநகர், கே.கே.நகர் மற்றும் அத்திக்கோம்பை ஊராட்சிகள் அமைந்துள்ளன. வேலை நிமித்தம் காரணமாக தினந்தோறும் ஏராளமான பயணிகள் இங்கிருந்து வெளியூர்களுக்கு சென்று வருகின்றனர். இப்பகுதியில் மேம்பாலம் கட்டப்பட்ட பின்னர் பல பஸ்ஸ்டாப்புகள் காணாமல் போயின. இதனால் திண்டுக்கல், மதுரை செல்லும் பயணிகள் ஆபத்தான இடத்தில் நின்று பஸ்களில் ஏறிச் செல்கின்றனர். இதே போல் பழநி மார்க்கமாக செல்வதற்கான பஸ்ஸ்டாப்பும் எது என்று தெரியவில்லை. இதனால் பயணிகளைப் போலவே, பஸ் டிரைவர்களும் குழப்பமடைந்து நினைத்த இடத்தில் பஸ்களை நிறுத்தி பயணிகளை இறக்கி விடுகின்றனர்.
நிழற்கூரை இல்லாததால் மழை மற்றும் வெயில் காலங்களில் பயணிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இப்பகுதியில் நிரந்தரமான பஸ்ஸ்டாப்பை நிழற்கூரை வசதியுடன் ஏற்படுத்தித் தர வேண்டும் என்பது பயணிகளின் எதிர்பார்ப்பு.

ஆக்கிரமிப்பு கோயில்கள் பற்றி கணக்கெடுப்பு

திண்டுக்கல், :மாநகராட்சி நகரமைப்பு ஆய்வாளர்கள் மூலம், திண்டுக்கல் நகரில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள ஆலயங்கள், கோயில்கள் குறித்த கணக்கெடுப்பு நடந்தது.
திண்டுக்கல் நகரில், "ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கோயில்கள், ஆலயங்கள் குறித்த ஆய்வறிக்கை சமர்ப்பிக்கும் படி, மாநகராட்சி கமிஷனர் ராஜன் உத்தரவிட்டார். இதனையடுத்து அவற்றை கணக்கெடுக்கும் பணியில் நகரமைப்பு ஆய்வாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
நகரமைப்பு அலுவலர் கோபாலகிருஷ்ணன் கூறுகையில், ""ஆக்கிரமிப்பில் உள்ள ஆலயங்கள், கோயில்களை அகற்றுவதற்கு உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. அதன்படி ஏற்கனவே கணக்கிடப்பட்டது குறித்த மறு ஆய்வுதான் தற்போது நடைபெறுகிறது. இதில் ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்கலாம், என்றார்.

கருத்தரங்கம்

நத்தம், :நத்தத்தில் வணிகர்களுக்கான உணவு பாதுகாப்பை அச்சுறுத்தும் தொற்றுநோய் கிருமிகள், உணவு கையாள்பவர்களின் பங்கு குறித்த கருத்தரங்கு நடந்தது.
இதில் உணவு பாதுகாப்பு, உணவு கையாள்பவர்கள் நோய் தொற்று இல்லாததை உறுதி செய்தல் குறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சாம் இளங்கோ பேசினார்.
நத்தம் வணிகர்கள் சங்க தலைவர் ஷேக்ஒலி உள்ளிட்ட வணிக பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

அரசன்கொடை-தாண்டிக்குடி ரோடு: வனஅலுவலர் ஆய்வு

தாண்டிக்குடி, :பத்து ஆண்டுகளுக்கு மேலாக அரசன்கொடை பகுதியினர் ரோடு வசதி கேட்டு வருகின்றனர். தற்போது கொடைக்கானல் ஒன்றியம் மூலம் ரூ.93 லட்சத்தில் புறநகர் பகுதியில் ரோடு அமைக்கும் பணி நடந்து வருகிறது. வனப்பகுதியில் எஞ்சியுள்ள இரண்டரை கி.மீ., ரோடு அமைந்தால் மட்டுமே இவர்களின் கோரிக்கை சாத்தியமாகும். திண்டுக்கல் மாவட்ட வன அலுவலர் சம்பத், அரசன்கொடை பகுதியினரை சந்தித்து வனப்பகுதியில் ரோடு அமையவுள்ள பகுதி குறித்து ஆய்வு செய்தார். வனத்துறையினரிடம் அளவீடு செய்து தரும்படி உத்தரவிட்டார். சம்பத் கூறுகையில், ""அரசன்கொடை ரோடுக்கு மத்திய அரசின் அனுமதி பெற வேண்டும். அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பெருங்கானல் பகுதி விவசாயிகளின் ரோடு அமைக்கும் கோரிக்கை குறித்தும் ஆய்வு செய்துள்ளோம்,'' என்றார்.

நத்தத்தில் கருணை கிழங்கு சாகுபடி தீவிரம்

நத்தம், :நத்தம் பகுதியில் கருணை கிழங்கு சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி
வருகின்றனர். நத்தம் சுற்றுவட்டார பகுதிகளான காசம்பட்டி, கவரப்பட்டி, புதுக்கோட்டை, வத்திப்பட்டி, லிங்கவாடி கிராமப் பகுதிகளில் அதிக அளவில் கருணை கிழங்கு சாகுபடி செய்யப்படுகிறது. சாதாரணமாக மார்க்கெட்டில் விற்பனைக்கு வரும் கிழங்குகளில் நன்கு முளை விட்டுள்ள விதைகளை தேர்ந்தெடுத்து நடவு செய்யலாம். சொந்த நிலத்தில் விளையும் கிழங்குகளிலும் விதை எடுக்கலாம். நடவு செய்ததிலிருந்து ஏழு முதல் எட்டு மாதங்களில் விளைந்து விடும். இரண்டு வாரங்களில் மூன்று முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பாத்திகளில் அதிகம் தண்ணீர் தேங்கி நிற்காமல் இருந்தால் கிழங்கு அழுகாமல் இருக்கும். கருணை கிழங்கு செடியில் நோய் தாக்குதல் குறைவு. நன்கு பராமரித்தால் ஒரு செடியில் இருந்து அதிக பட்சமாக ஒரு கிலோ வரை விளைச்சல் பெற முடியும்.
இப்பகுதியில் விளையும் கிழங்குகள் மதுரை உள்ளிட்ட மார்க்கெட்டில் விற்கப்படுகிறது. தற்போது வரத்து குறைவால் நல்ல விலை கிடைக்கிறது. விலை கிடைப்பதால் விவிசாயிகள் கருணை கிழங்கு சாகுபடியில் ஆர்வர் காட்டி வருகின்றனர். விவசாயி பழனிச்சாமி கூறியதாவது,""இருபது சென்டில் சாகுபடி செய்துள்ளேன். தற்போது கிலோ ரூ.60 க்கு விற்பனையாகிறது. இதனால் நல்ல லாபம் கிடைக்கிறது. வரத்து கூடுதல் காலங்களில் விலை குறையவும் வாய்ப்புள்ளது'' என கூறினார்.

கொடைக்கானல் கோடை விழா மலர் கண்காட்சியுடன் துவங்கியது: அமைச்சர்கள் பங்கேற்பு

கொடைக்கானல்: கொடைக்கானலில் 54 வது மலர் கண்காட்சி விழா மற்றும் கோடைவிழா நேற்று மழையோடு துவங்கியது. விழாவிற்கு திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் ஹரிஹரன் தலைமை வகித்தார். கோடைவிழாவை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் துவக்கி வைத்தார். இதில் அமைச்சர்கள் சண்முகநாதன், வைத்திலிங்கம் பங்கேற்றனர். விழாவில் தையல் மெஷின், Œலவை பெட்டி, மிக்சி வழங்கப்பட்டன. உதயகுமார் எம்.பி., வேணுகோபாலு எம்.எல்.ஏ., நகராட்சி தலைவர் ஸ்ரீதர், கமிஷனர் காளிமுத்து, அ.தி.மு.க., மாவட்ட பிரதிநிதி வீரராஜேஷ் கண்ணா, மேல்மலை ஜெ.,பேரவை செயலாளர் சிவாஜி, ஒன்றிய செயலாளர் முருகன், வில்பட்டி ஊராட்சி தலைவர் மலைச்சாமி, நகர ஜெ., பேரவை துணை செயலாளர் செல்வம், மீனவர் அணி செயலாளர் ஆரோக்யசாமி, இளைஞரணி துணை செயலாளர் பரமசிவம் கலந்து கொண்டனர். அதிகாரிகள்: மாவட்ட வருவாய் அலுவலர் நாகேந்திரன், ஆர்.டி.ஓ. சுரேஷ், வன அலுவலர்கள் சம்பத், வெங்கடேசன், தோட்டக்கலை துணை இயக்குனர் பாண்டி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாண்டியராஜன், சுற்றுலா அலுவலர் குணசேகரன் பங்கேற்றனர்.

கனமழை: ரோட்டில் குவிந்த செம்மண்ணால் பாதிப்பு

தாண்டிக்குடி, :தாண்டிக்குடி-அரசன்கொடை புறவழிச்சாலைக்கு கொட்டப்பட்ட செம்மண் கனமழையால் மெயின் ரோட்டில் குவிந்து வாகனங்களுக்கு இடையூறானது. தாண்டிக்குடி அருகே அரசன்கொடை புறவழிச்சாலையில் செம்மண் கொட்டப்பட்டுள்ளது. இப்பகுதியில் சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான ரோடு பகுதியில் கொட்டப்பட்ட செம்மண் அரிக்கப்பட்டு, தாண்டிக்குடி-வத்தலக்குண்டு மெயின் ரோட்டில் குவிந்தது. இப்பகுதி சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது. இதில் சிக்கும் வாகனங்கள் தடுமாறி கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்குகின்றன. மெயின் ரோட்டில் குவிந்துள்ள சகதியை அப்புறப்படுத்த நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல், :விவசாயிகள் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில், நதிகளை மத்திய அரசு நேரடி பார்வையில் கண்காணிக்க வலியுறுத்தி திண்டுக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இயக்கத் தலைவர் தர்மராஜ் தலைமை வகித்தார். மாவட்ட விவசாயிகள் சங்க நிர்வாகி அசோகன் முன்னிலை வகித்தார். தேசிய நீர்வழிச்சாலை இயக்க மாவட்ட தலைவர் போஸ், ஆத்தூர் ஒன்றிய தமிழக விவசாயிகள் சங்கத்தின் தலைவர் பாத்திமா ராஜரத்தினம் பங்கேற்றனர். ஆந்திராவில் 20 தொழிலாளர்களை சுட்டுக் கொன்றவர்களை தண்டிக்க வேண்டும். கொடைக்கானல் வனசரணாலய அறிவிப்பை திரும்ப பெற வேண்டும். மத்திய அரசின் நில
சீர்திருத்த திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு போன்றவை வலியுறுத்தப்
பட்டன.

இ-சேவை மீண்டும் துவக்கம்

தமிழகம் முழுவதும் முடங்கிய இ-சேவை மையங்கள் மீண்டும் இன்று(மே 17) முதல் இயங்கும் என, அரசு கேபிள்
"டிவி' நிறுவனம் தெரிவித்தது. தமிழகத்தில் 32 கலெக்டர் அலுவலகங்கள், 254 தாலுகா அலுவலகங்களில் இ-சேவை மையங்கள் செயல்படுகின்றன. இதில் 18 மையங்கள் "எல்காட்' நிறுவனம் மூலமாகவும், மற்ற மையங்கள் அரசு "கேபிள் டிவி' மூலமாகவும் செயல்படுகின்றன. இம்மையங்களில் வருமானம், ஜாதி, இருப்பிடம், முதல் தலைமுறை பட்டதாரி சான்றுகள் வழங்கப்படுகின்றன. மேலும் பெண் குழந்தை பாதுகாப்பு, திருமண நிதியுதவி போன்ற திட்டங்களுக்கும் விண்ணப்பிக்கலாம். சேவைக்கு தகுந்தாற்போல் கட்டணம் வசூலிக்கின்றனர். "சர்வர்' பிரச்னையால் இ-சேவை மையங்கள் ஒருவாரத்திற்கு மேலாக இயங்காமல் முடங்கின. ஜாதி, இருப்பிடம் போன்ற சான்றிதழ்கள் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் கல்லூரிகளில் விண்ணப்பிக்க முடியாமல் தவித்தனர். தற்போது "சர்வர்' பிரச்னை சரிசெய்யப்பட்டு, இன்று முதல் இ-சேவை மையங்கள் இயங்கும் என, அரசு கேபிள் "டிவி' நிறுவனம் தெரிவித்தது.

DINDIGUL MAP


Saturday, 10 January 2015

அரசு மருத்துவமனைக்கு ரூ.38 லட்சத்தில் நவீன இயந்திரம்

திண்டுக்கல், : அரசு மருத்துவமனைக்கு ரூ.38 லட்சத்தில் ரத்த உட்கூறு களை பிரிக்கும் நவீன இயந்திரம் வரவழைக்கப்பட்டு உள்ளது.
திண்டுக்கல் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதையடுத்து அரசு மருத்துவமனை நவீன மயமாக்கப் பட்டு வருகிறது. திண்டுக்கல், வேடசந்தூர் நத்தம், ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
இங்கு உள்நோயாளிகளாக 450 பேரும், வெளிநோயாளிகளாக 800க்கும் மேற்பட்ட பேரும் வந்து செல்கின்றனர்.
மேலும் நாள்தோறும் 15 பிரசவங்கள் நடைபெற்று வருகின்றன. அரசு மருத்துவமனையில் இயங்கி வரும் ரத்த வங்கியில், தற்போது ரூ.38 லட்சம் மதிப்பில் ரத்த உட்கூறுகள் பிரிக்கும் நவீன இயந்திரம் வரவழைக்கப்பட்டு உள்ளது.
இதன் மூலம் ரத்தத்தில் உள்ள தட்டை அணுக்கள், சிவப்பு அணுக்கள், பிளாஸ்மா, கிர்யோ பிரிசிப்டேட் உள்ளிட்டவைகளை பிரித்து பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு  தேவையானவை மட்டும் செலுத்த முடியும்.
இது குறித்து மருத்துவமனை கண்காணிப்பாளர் அன்புச்செல்வன் (பொ றுப்பு) கூறுகையில், நவீன இயந்திரம் மூலம் பிரசவ நோயாளிகளுக்கும், ரத்த சோகை, ரத்தம் உறைய வை க்க, புரதசத்து குறைபாடு உள்ளவர்களுக்கு ரத்தத்தில் தேவைப்படும் அணுக்கள் மட்டும் பிரித்து வழங்கலாம்.
இதனால் 1 யூனிட் ரத்தம் 3 வெவ்வேறு நோ யால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கலாம்.
மேலும் திண்டுக்கல் அரசு ரத்த வங்கியில் நாளு க்கு நாள் ரத்தத்தின் தேவை அதிகரிப்பதால், இளைஞர்கள், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ரத்ததானம் வழங்க முன்வர வேண்டும்.
பிரசவ நோயளிகளுக்கு அதிகளவு ரத்தம் தேவைப்படுகிறது. தங் களின் பிறந்தநாள், திருமண நாள், விஷேச தினங்களில் ரத்தம்தானம் வழங்க அனைவரும் முன்வர வேண்டும் என் றார்.

வேலைவாய்ப்பு இலவச பயிற்சி

திண்டுக்கல், :  திண்டுக்கல் கனரா வங்கியின் ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிலையத்தில் ஒருங்கிணைந்த விவசாயம் மற்றும் பொதுவான தொழில் முனைவோர் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன.
இப்பயிற்சி பெற விரும்புபவர்கள் குறைந்தபட்சம் 8ம் வகுப்பு படித்தவராக இருக்க வேண்டும். 18 முதல் 45வயதிற்குள் இருக்க வேண்டும். எவ்வித கட்டணமும் கிடையாது. பயிற்சி காலத்தில் உணவும் இலவசமாக வழங்கப்படும்.
விண்ணப்பத்துடன் ரே ஷன் கார்டு நகல், வாக்கா ளர் அடையாள அட்டை, கல்விச்சான்று நகல், பாஸ் போர்ட் அளவு போட்டோ மூன்று ஆகியவற்றை இ ணைக்க வேண்டும். விருப் பம் உடையவர்கள் திண்டுக்கல் நேருஜி நகர், ஜான் பால் வளாகம், டிஎம்எஸ் எஸ் கட்டட வளாகத்தில் உள்ள பயிற்சி மையத்தை நேரிலோ 94426 28434 99408 35147 ªன்ற எண்ணிற்குத் தொடர்பு கொள்ள லாம். பயிற்சிக்கு முன்பதிவு அவசியம். பயிற்சி முடிந்தபின் வங்கிக்கடன் உதவிக் கும் பரிந்துரை செய்யப்ப டும் என்று இயக்குநர் முருக ராஜ் தெரிவித்துள்ளார்.

ஜூடோ போட்டி ஈரோடு, சேலம் கல்லூரி சாம்பியன்


 













ஒட்டன்சத்திரம், : அண்ணா பல்கலை கழக மண்டலங்களுக்கு இடையே நடைபெற்ற ஜூடோ போட்டியில் ஈரோடு, சேலம் கல்லூரிகள் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது.
 ஒட்டன்சத்திரம் கிறிஸ்தவ பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் அண்ணா பல்கலைக்கழக மண்டலங்களுக்கு இடையே ஜூடோ போட்டி நடைபெற்றது. இதில் 18 பொறியியல் கல்லூரிகள் கலந்து கொண் டன.
அண்ணா பல்கலைக் கழக விளையாட்டு கழக துணை இயக்குனர் பாலகுமாரன் போட்டியை துவக்கி வைத்தார்.
ஆண்கள் 90 கிலோ எடைப் பிரிவில் கே.எல்.என் கல்லூரி அருண்பிரசாத் முதல் இடத்தை பிடித்தார். கிறிஸ்தவ பொறியியல் கல்லூரி மாணவர் அரவிந்த் இரண்டாவது இடத்தையும், 56 கிலோ எடைப்பிரிவில் ஈரோடு வெள்ளா ளர் பொறியியல் கல்லூரி பாலகிருஷ்ணன் முதல் இடத்தையும், திண்டிவனம் மயிலம் பொறியியல் கல்லூரி சேக்ஜபீர் செரீப் இரண்டாவது இடத்தையும், கிறிஸ்தவ பொறியல் கல்லூரி மாணவர் வீரமுத்து மூன்றாவது இடத்தையும், பெண்கள் பிரிவில் நிசாந்தி,வசந்தி,கஸ்தூரி வேறுபட்ட எடைப்பிரிவுகளில் இரண்டாவது இடத்தை பிடித்தனர்.
மேலும் இக்கல்லூரியை சேர்ந்த திவ்யா மற்றும் அனிதா முதலிடத்தினை பெற்று தேசிய அளவிலான போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
போட்டியின் ஒட்டு மொத்த சாம்பியன் பட்ட த்தை ஈரோடு வெள்ளாளர் பொறியியல் கல்லூரியும், சேலம் சோனா பொறியியல் கல்லூரியும் பகிர்ந்து கொண்டன.
பரிசளிப்பு நிகழ்ச்சிக்கு கிறிஸ்தவ பொறியியல் கல்லூரியின் முதல்வர் கெசிசெல்வவிசிலா முன்னிலை வகித்து வெற்றிபெற்ற அணியினருக்கு சாம்பியன் கோப்பையை வழங்கினார்.

விளையாட்டு துறையில் திறமையை வெளிப்படுத்தினால் வேலை வாய்ப்பில் முன்னுரிமை கலெக்டர் அறிவுரை

திண்டுக்கல், : மாணவர்கள் கல்வியுடன் விளை யாட்டு துறையிலும் திறமை களை வெளிப்படுத்த வேண் டும். இதன்மூலம் வேலைவாய்ப்பில் முன்னு ரிமை பெறலாம் என்று கலெக்டர் ஹரிஹரன் தெரிவித்துள் ளார். திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கில் முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி நிறைவுவிழா நடைபெற்றது. கலெக்டர் ஹரிஹரன் தலை மை வகிக்க, எம்பி உதயக்குமார், மேயர் மருதராஜ் ஆகியோர் முன்னிலை  கித்தனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ்களை வழங்கி கலெக்டர் பேசியதாவது: கிராமப்புர விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்த தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் பங்கு பெற வை க்க வேண்டும் என்ற நோக்கில் இப்போட்டிகள் நடத்தப்படுகிறது. இதற்காக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் உரிய பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
மாணவர்கள் கல்வியு டன் விளையாட்டு துறையி லும் திறமைகளை வெளிப்படு த்த வேண்டும்.
இதன் மூலம் வேலைவாய்ப்பில் முன்னு ரிமை பெறலாம் என்றார். இதில் மாவட்ட விளையாட்டு அலுவலர் சவுந்திரராஜன் உட்பட பலர் கலந்து கொண் டனர்.

பனி தாக்குதலில் இருந்து மலர செடிகளை பாதுகாக்க ஏற்பாடு

    


கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் பனி தாக்குதலில் இருந்து மலர் செடிகளை பாதுகாக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மலர் கண்காட்சி

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் மே மாதம் மலர் கண்காட்சி நடைபெறும். இதையொட்டி பல்வேறு வகையான 3 லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு வருகின்றன. தற்போது கொடைக்கானல் பகுதியில் குளிர் சீசன் நிலவி வருகிறது. இதனால் இரவு வேளையில் பனிப்பொழிவு ஏற்படுகிறது.

எனவே மலர் செடிகள் கருகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. பனியின் தாக்கத்தில் இருந்து மலர் செடிகளை பாதுகாக்க தோட்டக்கலைத் துறையினர் செடிகளின் மீது நிழல் வலைகளை அமைத்து பாதுகாத்து வருகிறார்கள். இதற்காக மலர் செடிகளின் மேல் பந்தல் அமைக்கப்பட்டு அதன்மீது வலைகள் போர்த்தப்பட்டுள்ளன.

நிழல் வலைகள்

இது குறித்து தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் கூறும்போது, வழக்கத்துக்கு மாறாக இந்த ஆண்டு 3 லட்சம் மலர் செடிகள் வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்டு நடவு செய்யப்பட்டுள்ளன. இவைகள் வருகிற ஏப்ரல் மாதம் பூக்க தொடங்கி ஜூன் மாதம் வரை இருக்கும். இதனை பாதுகாக்க நிழல் வலைகள் அமைத்துள்ளோம். தற்போது வரை நீர்ப்பனியே நிலவி வருகிறது. உறைபனி நிலவினால் மலர் செடிகள் கருகும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றனர். 

இருசக்கர வாகனங்களில் போலீசார் 24 மணி நேரமும் ரோந்து

     



திண்டுக்கல் மாவட்டத்தில் திருட்டு, கொள்ளையை தடுக்க 24 மணி நேரமும் இருசக்கர வாகனங்களில் போலீசார் ரோந்து செல்ல உள்ளனர். பொதுமக்கள் ‘வாட்ஸ்-அப்’ மூலம் தகவல் கொடுக்கலாம் என்று போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தெரிவித்தார்.

இருசக்கர வாகன ரோந்து

திண்டுக்கல் மாவட்டத்தில் திருட்டு, வழிப்பறி கொள்ளையை தடுக்க இருசக்கர, நான்குசக்கர வாகனங்களில் போலீசார் ரோந்து சென்று வருகின்றனர். எனினும், கடந்த சில மாதங்களாக கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் புதிதாக பொறுப்பேற்ற போலீஸ் சூப்பிரண்டு சரவணன், அந்த வாகனரோந்து பணியை மாற்றி அமைத்துள்ளார்.

மேலும் ரோந்து செல்வதற்கு கூடுதலாக இருசக்கர வாகனங்கள் வாங்கப்பட்டு, போலீசாரும் நியமிக்கப்பட்டு இருக்கின்றனர். அதேபோல் சிவப்பு விளக்குகளும் பொருத்தப்பட்டு, ரோந்து வாகனங்கள் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளன. இதையடுத்து திண்டுக்கல் நகர், புறநகர் உட்கோட்டங்களில் புதுப்பிக்கப்பட்ட இருசக்கர வாகன ரோந்து பணியை, சீலப்பாடி மைதானத்தில் போலீஸ் சூப்பிரண்டு சரவணன் நேற்று தொடங்கி வைத்தார்.

24 மணி நேரமும் ரோந்து

அதன்பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பொதுமக்களிடம் நம்பகத்தன்மையை உருவாக்கும் வகையில் 24 மணி நேரமும் இருசக்கர வாகனங்களில் போலீசார் ரோந்து செல்வார் கள். முதல்கட்டமாக திண்டுக்கல் நகர், புறநகர் உட்கோட்டங்களில் இன்று (நேற்று) தொடங்கப்பட்டது. இந்த பகுதிகளில் 20 வாகனங்களில் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் போலீசார் ரோந்து செல்வார்கள்.

இந்த வாகன ரோந்து பணியை அந்தந்த உட்கோட்ட துணை சூப்பிரண்டுகள் நேரடியாக கண்காணிப்பார்கள். வங்கிகள், ஏ.டி.எம்.மையங்கள், நகைக்கடைகள், கடைவீதி அமைந்துள்ள பகுதிகளில் ரோந்து பணி தீவிரப்படுத்தப்படும். இந்த ரோந்து போலீசார் மக்களுடன், மக்களாக பழகி தகவல்களை சேகரித்து குற்ற சம்பவங்களை தடுப்பார்கள்.

தகவல் தெரிவிக்கலாம்

ஒவ்வொரு பகுதிக்கும் 3 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் செல்போன் எண்கள் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும். அதன்மூலம் பொதுமக்கள் ரோந்து போலீசாரை தொடர்பு கொண்டு குற்ற சம்பவங்கள் குறித்து தகவல் தெரிவிக்கலாம். உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்துவார்கள்.

மேலும் முக்கிய பகுதிகளில் வாகன தணிக்கையிலும் ரோந்து போலீசார் ஈடுபடுவார்கள். இதன் மூலம் சிறு, சிறு பிரச்சினைகளுக்கு எல்லாம் மக்கள் போலீஸ் நிலையங்களுக்கு வருவதை தவிர்க்கலாம். இதன் தொடர்ச்சியாக பழனி, கொடைக்கானல், ஒட்டன்சத்திரம், வேடசந்தூர், நிலக்கோட்டை ஆகிய உட்கோட்டங்களிலும் வாகன ரோந்துதீவிரப்படுத்தப்படும்.

‘வாட்ஸ்-அப்’ மூலம் புகார்

இதுமட்டுமின்றி மாவட்ட போலீசுக்கு ‘வாட்ஸ்-அப்’ எண் 99949 34488 அறிமுகப்பட்டு உள்ளது. குற்ற சம்பவங் கள், அது தொடர்பான தகவல்கள் கிடைத்தால் உடனே வாட்ஸ்அப் மூலம் போலீசுக்கு தெரிவிக்கலாம். தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். இந்த ‘வாட்ஸ்-அப்’ தகவல்கள் தனிப்பிரிவு அலுவலகம் மூலம் கண்காணிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட போலீசார் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.

மாவட்டம் முழுவதும் குற்றங்களை தடுக்கும் வகையில் இருசக்கர வாகன ரோந்து, ‘வாட்ஸ்-அப்’ புகார் ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. எனவே, குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க பொதுமக்கள் போதிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். குற்ற சம்பவங்கள், தகவல்களை உடனுக்குடன் போலீசாருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். நத்தம், ஒட்டன்சத்திரம் பகுதிகளில் கள்ளத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. கள்ளத்துப்பாக்கி பற்றியும் மக்கள்தகவல்தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார். அப்போது போலீஸ் துணை சூப்பிரண்டுகள் ராமச்சந்திரன், வனிதா, தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் அய்யாத்துரை மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

அனுமதியின்றி பெட்ரோல், மது விற்பனை: பெண் உள்பட 6 பேர் கைது


வடமதுரை
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் வினோதா தலைமையில் போலீசார் அந்த பகுதியில் உள்ள கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது சில கடைகளில் அனுமதியின்றி பெட்ரோல் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து பெட்ரோல் விற்பனை செய்ததாக சுக்காம்பட்டியில் காளிச்சாமி (வயது 45), எஸ்.குரும்பபட்டியில் பழனிவேல் (31), கொம்பேறிபட்டியில் காந்தி (55), அக்கலன் (50) ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.
மேலும் பூசாரிபட்டியில் அனுமதி இல்லாமல் மதுபானம் விற்ற அதே பகுதியை சேர்ந்த கமலாராணி (35) என்ற பெண்ணையும், வேங்கனூரில் புதுப்பட சி.டி.க்களை திருட்டுத்தனமான விற்பனை செய்த சரவணன் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.

கல் குவாரியில் டிராக்டர் பறிமுதல்

ரெட்டியார்சத்திரம்:ரெட்டியார்சத்திரம் கே.புதுக்கோட்டையில் உள்ள ஒருகுவாரியில் அனுமதி காலம் கடந்தாண்டு ஆகஸ்டில் முடிந்தது. தொடர்ந்து செயல்பட்டதால் அதிகாரிகளுக்கு அடுத்தடுத்து புகார் சென்றது. அவர்களின் எச்சரிக்கைக்கு பின்பும் தொடர்ந்து செயல்பட்டது. நேற்று திண்டுக்கல் ஆர்.டி.ஓ., உத்தமன் தலைமையில், ரெட்டியார்சத்திரம் ஆர்.ஐ., வேல்முருகன், வி.ஏ.ஓ., ரேணுகாதேவி அங்கு சென்றனர். அங்கு பணிகளை நிறுத்திய அவர்கள், டிராக்டரை பறிமுதல் செய்து ரெட்டியார்சத்திரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு சென்றனர்.மாவட்ட நிர்வாகம் இப்பகுதி குவாரிகளின் செயல்பாடுகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்

பத்திரிகை படிக்க ஆலோசகர் அறிவுரை

பழநி: பழநி சுப்ரமண்யா பொறியியல் கல்லூரியில் பிளஸ் 2 மாணவர்களுக்கு கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி தலைவர் ஜனார்த்தனன் தலைமைவகித்தார். முதல்வர் சரவணன் முன்னிலைவகித்தார். இதில் கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி பேசியதாவது: இன்று எல்லாத் துறைகளிலும் வேலைவாய்ப்பு அதிகமாக உள்ளன. கண்பார்வையில்லாத பெண் ஐ.ஏ.எஸ்., படித்து சாதனை படைக்கும்போது, நம்மால் ஏன் முடியாது. மாணவர்கள் முழுமுயற்சிசெய்தால் சாதிக்க முடியும். பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள் கலந்தாய்வுக்கு செல்லும் முன், அங்குசென்று துறைகளை தேர்வுசெய்வது எப்படி என முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். தினமும் பத்திரிகை படித்தால், எந்த துறையில் வேலைவாய்ப்புகள் உள்ளன என அறியலாம், என்றார்.

விளையாட்டு போட்டி

                  

கொடைக்கானல்:கொடைக்கானல் பெருமாள்மலையில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார திட்டத்தின் மூலம் கலாசார கலை மற்றும் விளையாட்டு போட்டிகள் நடந்தது.இதில் வென்ற சுயஉதவிக்குழுக்களுக்கு பரிசளிப்பு விழாவுக்கு பி.டி.ஓ., பட்டுராஜன் தலைமை வகித்தார். ஒன்றிய துணைத்தலைவர் ஆர்.ஏ.பொன்னுதுரை முன்னிலை வகித்தார். ஒன்றிய தலைவர் ராதாகிருஷ்ணன் பரிசு வழங்கினார். அடுக்கம் ஊராட்சி மன்ற தலைவர் வீரமணி, சேர்முகராஜன், சுப்ரமணியன், தங்கவேல் கலந்து கொண்டனர்.

"டெங்கு' பாதிப்பு வீடுகளில் கலெக்டர் ஆய்வு

வத்தலக்குண்டு:வத்தலக்குண்டில் "டெங்கு' காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் வீடுகளுக்குச் சென்று பார்வையிட்ட கலெக்டர் ஹரிஹரன், சுகாதாரத்துறையினருக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தரும்படி கேட்டுக் கொண்டார். வத்தலக்குண்டில் 2 மாதங்களில் "டெங்கு'வால் 16 பேர் பாதிக்கப்பட்டனர். இவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்கப்பட்டதால் பாதிப்பு குறைந்து உள்ளது. இதனையடுத்து சுகாதாரத்துறையினர் வீடு, வீடாக சென்று கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.இப்பகுதிகளை நேற்று கலெக்டர் ஹரிஹரன் ஆய்வு செய்தார். வ.உ.சி., நகரில் "டெங்கு'வால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்குச் சென்று பார்வையிட்டார். அவரிடம் பொதுமக்கள், "கழிவுநீர் வடிகால் வசதியில்லை, பேரூராட்சி நிர்வாகம் குடிநீர் வினியோகத்தில் பாரபட்சம் காட்டுகிறது என, புகார் செய்தனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து குறைகளை உடனடியாக சரி செய்ய உத்தரவிட்ட கலெக்டர், ""துப்புரவு பணியாளர்களுக்கு ஒத்துழைப்ப தரவேண்டும். அப்போதுதான் "டெங்கு'வை முழுமையாக ஒழிக்க முடியும்'' என்றார்.

ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு

              


திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
சரவணன் எஸ்.பி., கூறியதாவது: திண்டுக்கல் மாவட்டத்தில் ஊர்க்காவல் படையில் 100 இடங்கள் காலியாக உள்ளன. 10 ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தவறிய இருபாலரும் விண்ணப்பிக்கலாம். 18 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும். விண்ணப்பங்களை திண்டுக்கல், பழநி ஊர்க்காவல் படை அலுவலகத்தில் பெறலாம். அதை பூர்த்தி செய்து ஜன., 24 க்குள் வழங்க வேண்டும். சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் ஜன., 30 ல் நேர்முத்தேர்வு நடக்கும். விபரங்களுக்கு 0451 2420234 ல் தொடர்பு கொள்ளலாம், என்றார்.

மல்லிகையில் வெள்ளைக்கொசுநூல்புழு தாக்குதலால் பாதிப்பு


     

 




திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டத்தில் மல்லிகையில் வெள்ளைக்கொசு, நூல்புழு தாக்குதல் ஏற்பட்டுள்ளது.திண்டுக்கல் மாவட்டத்தில் செம்பட்டி, நிலக்கோட்டை, ஏ.வெள்ளோடு, வத்தலக்குண்டு, ஒட்டன்சத்திரம் உட்பட பல கிராமங்களில் மல்லிகை சாகுபடி நடக்கிறது. கடந்த வாரம் வரை மழை பெய்ததால் விளைச்சல் அதிகரித்துள்ளது. தற்போது அதிகளவு பனிப் பொழிவு காணப்படுகிறது. மல்லிகைப்பூவில் வெள்ளைக்கொசு, நூல்புழு தாக்குதல் அதிகம் உள்ளது. தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் விவசாயிகளுக்கு ஆலோசனைகள் எதுவும் வழங்கவில்லை.எனவே வெள்ளைக்கொசு தாக்குதலில் இருந்து செடிகளை காக்க அசிட்டியா பிரைடு, நூல்புழு தாக்குதலில் இருந்து செடிகளையும், பூக்களையும் பாதுகாக்க புரோபைபாஸ், கார்டா ஹைட்ரோகுளோரைடு வாங்கி வாரம் இருமுறை விவசாயிகளே தெளித்து வருகின்றனர். தோட்டக்கலைத்துறையினர் களப்பணிக்கு ஆய்வுக்கு சென்று நேரடியாக ஆலோசனை வழங்கினால் மட்டுமே அது முறையானதாக இருக்கும். மாவட்ட நிர்வாகம் இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும், என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

உணவு உற்பத்தியை அதிகரிக்கும் களப்பணியில் 2,078 அலுவலர்கள் :சாகுபடி விபரம் "டேப்லெட்'டில் பதிவு

திண்டுக்கல்:விவசாய துறையில் உணவு தானிய உற்பத்தியை அதிகரிக்க, 2078 உதவி வேளாண் அலுவலர்கள் களப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பயிர்களின் சாகுபடி விபரங்கள் உடனுக்குடன் "டேப்லெட்'டில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.விவசாய துறையில், "இரண்டு மடங்கு உற்பத்தி, முன்றுமடங்கு வருமானம்' என்ற குறிக்கோளுடன் அரசு செயல்படுகிறது. தமிழகத்தில் உணவு தானிய உற்பத்தி 110 மெ., டன்னை எட்டியதை பாராட்டி
மத்திய அரசு கிர்ஷிகர் மன் விருதும், ரூ.2 கோடி ரொக்கப்பணமும் வழங்கியது.
இந்தாண்டு இலக்காக 145 மெ., டன் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு மாநிலம் முழுவதும் முதற்கட்டமாக ஜன.5 முதல் விவசாயிகளுக்கான நிரந்தர பயண திட்டம் துவங்கியுள்ளது. இதில் ஆயிரக்
கணக்கான அலுவலர்கள் தீவிரம் காட்டியுள்ளனர். திண்டுக்கல் விவசாய இணை இயக்குனர் சம்பத்குமார் கூறியதாவது: விவசாய உதவி அலுவலர்கள் தங்கள் பகுதி விவசாயிகளை சந்தித்து சாகுபடி குறைபாடுகளை கேட்டறிய வேண்டும். அதிலுள்ள பிரச்னைகளை, "டேப்லெட்'டிலுள்ள எப்.சி.எம்.எஸ்., மென்பொருள் உதவியுடன், வேளாண் இயக்குனரகம், மற்றும் காந்திகிராம பல்கலை வேளாண் அறிவியல் மையம், வேளாண் பல்கலைகழகங்களுக்கு அனுப்பி வைப்பர். இதன்மூலம் ஆராய்ச்சியாளர், உயரதிகாரிகள் ஆலோசனை பெற்று சாகுபடி பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும். இதனால் உணவு உற்பத்தியில் விரைவாக தன்னிறைவு பெற முடியும். இதற்காக தமிழகம் முழுவதும் விவசாய துறையில் 379யூனியன்கள், தோட்டக் கலைத்துறையில் கொடைக்கானல், ஊட்டி, விழுப்
புரம், வெள்ளிமலை என 6 பகுதிகளில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். இப்பணியில் 2078 உதவி வேளாண் அலுவலர்கள் பங்கேற்றுள்ளனர்.இப்பணியிடங்களில் 360 காலியிடங்கள் உள்ளதால் அதை சமாளிக்க, தோட்டக்கலை துறையிலிருந்து 275 உதவி வேளாண் அலுவலர்களும், அட்மா திட்டத்தில் 85 அலுவலர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.'' என்றார்.

கொடைக்கானல் பகுதியில் தொடர்மழை எதிரொலி: பழனி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு விவசாயிகள் மகிழ்ச்சி

                 



கொடைக்கானல் பகுதியில் தொடர்மழை எதிரொலியாக பழனியில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அணைகளுக்கு நீர் வரத்து திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் வரத்து கால்வாய்களில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பழனி பாலாறு அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
அணையின் மொத்த உயரமான 65 அடியில் தற்போது 58.07 அடி வரை தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 28 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 110 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதே போல் வரதமாநதி அணையின் மொத்த உயரமான 66.47 அடியில், தற்போது 57.58 அடிவரை தண்ணீர் உள்ளது. வினாடிக்கு 54 கனஅடி தண்ணீர் வரத்து உள்ளது.
விவசாயிகள் மகிழ்ச்சி அணையில் இருந்து வினாடிக்கு 10 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. குதிரையாறு அணையின் மொத்த உயரமான 79.99 அடியில் தற்போது 67.88 அடியாக உள்ளது. வினாடிக்கு 3 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 20 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
நங்காஞ்சியாறு அணையின் மொத்த உயரமான 40 அடியில் தற்போது 19.75 அடிவரை தண்ணீர் உள்ளது. அணைக்கு நீர்வரத்து இல்லாததால் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படவில்லை.
பழனி நகரின் குடிநீர் தேவை மற்றும் விவசாய பாசனத்திற்காக தொடர்ந்து அணைகளிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகின்றன. இதனால் பழனி மற்றும் சுற்று வட்டார கிராமப்புறங்களில் வசிக்கும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் குடியரசு தினவிழாவை முன்னிட்டு போலீசார் தீவிர கண்காணிப்பு ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் அறிவுரை


திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் குடியரசு தினவிழாவை முன்னிட்டு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் ஹரிகரன் பேசினார்.
குடியரசு தினவிழா ஆலோசனை குடியரசு தினவிழா கொண்டாட்டம் தொடர்பான முன்னேற்பாடு பணிகள் பற்றிய ஆலோசனை கூட்டம், திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் ஹரிகரன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் நாகேந்திரன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் கலெக்டர் ஹரிகரன் பேசியதாவது:–
அரசு பஸ் வசதிவருகிற 26–ந்தேதி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் குடியரசு தினவிழா நடக்கிறது. இதையொட்டி, திண்டுக்கல் காமராஜர் பஸ் நிலையத்தில் இருந்து, விழா நடைபெறும் மைதானத்திற்கு சிறப்பு பஸ்களை இயக்க, அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த குடியரசு தினவிழாவில் நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட தியாகிகள் கவுரவிக்கப்படுகிறார்கள். அதேபோல் சிறப்பாக பணிபுரிந்த அரசு அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள், அரசின் பல்வேறு துறைகள் சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட இருக்கின்றன. பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளன.
போலீஸ் தீவிர கண்காணிப்பு எனவே, மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தேவையான குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும். மேலும் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு பாதுகாப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ரவி, கலெக்டர் அலுவலக மேலாளர் தாஜுதீன், ஆர்.டி.ஓ. உத்தமன், முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி, போலீஸ் துணை சூப்பிரண்டு ராமச்சந்திரன் உள்பட அனைத்து துறை அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
--–
குடியரசு தினவிழா முன்னேற்பாடுகள் பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் ஹரிகரன் தலைமையில் நடந்த போது எடுத்தபடம்.

மாவட்டம் முழுவதும் 567 குழந்தை தொழிலாளர்களுக்கு சிறப்பு மையங்களில் பயிற்சி கலெக்டர் ஹரிகரன் தகவல்



            


திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டத்தில் 567 குழந்தை தொழிலாளர்களுக்கு சிறப்பு மையங்களில் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக, கலெக்டர் ஹரிகரன் தெரிவித்துள்ளார்.
குழந்தை தொழிலாளர்கள் தேசிய குழந்தை தொழிலாளர் திட்டத்தின் செயற்குழு கூட்டம், திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஹரிகரன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் நாகேந்திரன் முன்னிலை வகித்தார். அப்போது கலெக்டர் ஹரிகரன் பேசியதாவது:–
திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை 567 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டு இருக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும், 17 சிறப்பு பயிற்சி மையங்களில் கல்வி மற்றும் தொழிற்கல்வி பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் மாதந்தோறும் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்.
அதேபோல் கடைகள், உணவு விடுதிகள் மற்றும் தொழிற்சாலைகளில் குழந்தை தொழிலாளர்கள் யாராவது இருக்கிறார்களா? என்று அதிகாரிகள் ஆய்வு நடத்த வேண்டும். சிறப்பு மையங்களில் பயிற்சி பெற்ற 3 பேர் தற்போது பிளஸ்–2, கல்லூரி, தொழிற்நுட்ப கல்லூரியில் பயின்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கல்வி உபகரணங்கள் எனவே, சிறப்பு பயிற்சி மையங்களுக்கு தேவையான கல்வி மற்றும் தொழிற்கல்வி உபகரணங்களை வாங்கி அதிகாரிகள் வழங்க வேண்டும். அதோடு மாவட்டம் முழுவதும் தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளிகளில் படிப்பை பாதியில் நிறுத்தும் மாணவர்களின் விவரங்களை பெறும் வகையில், அவசர உதவி தொலைபேசி எண்கள், முகவரி கொண்ட ஸ்டிக்கர்களை ஒட்ட வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் ஹரிகரன் பேசினார்.
இந்த கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) சீத்தாராமன், குழந்தை தொழிலாளர் திட்ட இயக்குனர் அறிவழகன், தொழிலாளர் ஆய்வு அலுவலர் முருகன், தொழிற்சாலை ஆய்வு அலுவலர் சுதாராஜன், கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் சுப்பிரமணி, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சத்தியநாராயணன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் தர்ணா போராட்டம்

திண்டுக்கல்,
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்ணா போராட்டம் பி.எஸ்.என்.எல். அதிகாரிகள்–ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், திண்டுக்கல்லில் பழனி ரோட்டில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்துக்கு கூட்டமைப்பின் திண்டுக்கல் நகர தலைவர் விஜயரெங்கன் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் ஜோதிநாதன் வரவேற்றார்.
மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் உதயசூரியன் போராட்டத்தை தொடங்கி வைத்தார். மதுரை மாவட்ட தலைவர் சிவகுருநாதன், பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் சங்க மாவட்ட செயலாளர் சந்திரசேகரன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். எல்.ஐ.சி.கோட்ட துணை செயலாளர் வாஞ்சிநாதன் வாழ்த்தி பேசினார்.
பல்வேறு கோரிக்கைகள் தர்ணா போராட்டத்தில் வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகள் வருமாறு:–
காலிப்பணியிடங்களில் புதிதாக ஆட்களை நியமனம் செய்ய வேண்டும். தனியாக இயக்கப்படும் பி.பி.என்.எல். ( இணையதள சேவை) நிறுவனத்தை பி.எஸ்.என்.எல். நிறுவனத்துடன் இணைக்கப்பட வேண்டும். வளர்ச்சி, விரிவாக்கத்துக்கு தேவையான கருவிகள், கேபிள்கள், ஆப்டிக் பைபர் ஆகியவற்றை வழங்க வேண்டும்.
பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு ஸ்பெக்டரம் அலைவரிசை ஒதுக்கப்பட வேண்டும். 4 ஜி சேவையை தாமதமின்றி அனுமதிக்க வேண்டும். மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை அலுவலகங்களில் பி.எஸ்.என்.எல். பயன்பாட்டை கட்டாயமாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

திண்டுக்கல்லில் தொடரும் அவலம்: குழாய் உடைப்பினால் வீணாகும் தண்ணீர்

 






திண்டுக்கல்,
திண்டுக்கல்லில், குழாய் உடைப்பு காரணமாக சாலை, தெருக்களில் தண்ணீர் வீணாகி கொண்டிருக்கிறது.
குடிநீர் குழாய் உடைப்பு ஆத்தூர் காமராஜர் அணை, காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் ஆகியவற்றின் மூலம் திண்டுக்கல் நகருக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இவ்விரு திட்டங்களின் மூலம் கிடைக்கிற தண்ணீரை சீராக வினியோகம் செய்ய முடியாமல் மாநகராட்சி நிர்வாகம் உள்ளது.
தற்போது ஆத்தூர் காமராஜர் அணை நிரம்பி வழிந்த போதிலும், திண்டுக்கல் நகரில் 10 முதல் 15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்வதே வாடிக்கையாக உள்ளது. இதற்கு வினியோக முறையில் ஏற்பட்ட குளறுபடியும், குழாய் உடைப்புமே முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.
திண்டுக்கல் நகரில் குழாய் உடைப்பு இல்லாத நாட்களே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவுக்கு குழாய்கள் உடைந்து சாலை, தெருக்களில் தண்ணீர் வீணாக ஓடுவது அன்றாட காட்சியாகி விட்டது.
வீணாகும் தண்ணீர் திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தின் சுற்றுச்சுவரையொட்டி பதிக்கப்பட்ட குடிநீர் குழாயில் நேற்று திடீரென உடைப்பு ஏற்பட்டது. அதில் இருந்து வெளியேறி தண்ணீர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலக வளாகத்திலும் தண்ணீர் புகுந்தது. இதனால் அந்த பகுதியில் குளம் போல தண்ணீர் தேங்கி நின்றது.
அலுவலக வளாகம் முழுவதும் சேறும் சகதியுமாக காட்சி அளித்தது. இதன் காரணமாக முதன்மை கல்வி அலுவலகத்துக்கு வந்து சென்ற ஊழியர்கள், ஆசிரியர்கள் கடும் சிரமம் அடைந்தனர். இதுமட்டுமின்றி குழாய் உடைப்பில் இருந்து வெளியேறிய தண்ணீர், பழனி ரோட்டின் சாலையோரத்தில் உள்ள சாக்கடை கால்வாய்க்குள் வீணாக சென்றது. குடிநீரும், கழிவுநீரும் ஒன்றாக கலந்தது. இதன் காரணமாக பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, குழாய்களில் உடைப்பு ஏற்படாமல் மாநகராட்சி நிர்வாகம் பார்த்து கொள்ள வேண்டும். மேலும் உடைப்பு ஏற்பட்டால், உடனடியாக அங்கு சென்று சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புகையில்லா பொங்கல் திருநாள்: கழிவுகளை சேகரிக்க துப்புரவு முகாம் கலெக்டர் ஹரிகரன் தகவல்


திண்டுக்கல்,
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் பற்றி திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் ஹரிகரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
பொங்கல் திருநாளுக்கு முந்தைய தினம் போகி பண்டிகை தினத்தில் வீடுகள், வணிக நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் இதர நிறுவனங்களில் வெளியேற்றப்படும் பயன்படாத பிளாஸ்டிக் பொருட்கள், சாக்கு பைகள், தலையணைகள், பாய்கள் உள்ளிட்ட கழிவுகள் எரிக்கப்படுகின்றன. இதனால் சுற்றுச்சூழல் மாசு அடைந்து, டையாக்சின் மற்றும் பியூரான் போன்ற அபாய நச்சு எரிவாயுக்கள் வெளிப்பட்டு பொதுமக்களுக்கு புற்றுநோய் மற்றும் மூச்சுத் திணறல் ஆகியவை ஏற்படும்.
 
                    
இதை தவிர்க்க நாளை (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 14–ந்தேதி வரை பள்ளி, கல்லூரி மாணவர்கள், பேரூராட்சி பணியாளர்கள் மூலம் விழிப்புணர்வு பேரணி நடக்க இருக்கிறது. மேலும் துப்புரவு பணியாளர்கள், சுயஉதவிக்குழுவினரை கொண்டு ஒருங்கிணைந்த துப்புரவு பணி முகாம்கள் நடைபெற இருக்கின்றன. இந்த முகாம் நடைபெறும் நாட்களில் நேரில் வந்து கழிவுகளை வாங்கி புகையில்லாத பொங்கல் நாளாக உருவாக்க உள்ளனர். இதற்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

திண்டுக்கல்லுக்கு விற்பனைக்கு வந்த 83 கிலோ எடை கொண்ட பிரமாண்ட பூசணிக்காய்





திண்டுக்கல்,
திண்டுக்கல் மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் ஜீவா (வயது 27). இவர் அபிராமி அம்மன் கோவில் அருகே காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். பொங்கலையொட்டி வியாபாரம் மும்முரமாக நடக்கும் என்பதால், திண்டுக்கல்லை அடுத்த மா.மூ.கோவிலூருக்கு சென்று விவசாயிகளிடம் நேரடியாக காய்கறிகளை வாங்கினார்.
அப்போது ஏராளமான பூசணிக்காய்களையும் அவர் வாங்கினார். அவர் வாங்கிய பூசணிக்காய்களில் ஒரு பூசணிக்காய் மட்டும் 83 கிலோ எடை கொண்டதாக இருந்தது. இந்த பிரமாண்ட பூசணிக்காய் குறித்து ஜீவா கூறும்போது, ‘பொதுவாக அதிகபட்சமாக ஒரு பூசணிக்காயின் எடை 15 கிலோ முதல் 20 கிலோ வரை இருக்கும். தற்போது, 83 கிலோவில் பூசணிக்காய் விளைந்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. இந்த பூசணிக்காயை பொங்கலையொட்டிதான் விற்பேன். அதுவரை இதை பொதுமக்களின் பார்வைக்காக வைத்திருப்பேன்’ என்றார். தற்போது, பார்வைக்காக வைக்கப்பட்டுள்ள அந்த பூசணிக்காயை ஏராளமான பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கிறார்கள். வெளிநாட்டில் பல நூறு கிலோ எடை கொண்ட பூசணிக்காய்கள் விளைவது சகஜம் என்றாலும், திண்டுக்கல்லில் விற்பனைக்காக வந்த 83 கிலோ பூசணி பொதுமக்களிடம் பெரும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஊரக வளர்ச்சித்துறை மூலம் ரூ.265 கோடி மதிப்பில் வளர்ச்சி பணிகள் கலெக்டர் ஹரிகரன் தகவல்


திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை மூலம் ரூ.265 கோடி மதிப்பில் வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருவதாக கலெக்டர் ஹரிகரன் கூறினார்.
கலெக்டர் ஆய்வு திண்டுக்கல் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்ட பணிகளை கலெக்டர் ஹரிகரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்படி திண்டுக்கல் ஒன்றியம் சீலப்பாடி ஊராட்சியில் இடைநிரவல் நிதியின் கீழ் ரூ.7 லட்சம் செலவில் கட்டப்பட்ட குடிநீர் மேல்நிலைத்தொட்டியை கலெக்டர் ஹரிகரன் பார்வையிட்டார். அதேபோல் செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சியில் நெசவாளர்களுக்கான சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் கட்டும் பணியையும் ஆய்வு செய்தார்.
பின்னர் அதே பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.14 லட்சத்து 83 ஆயிரம் செலவில் சாலையோரங்களில் மரக்கன்றுகள் நடும் பணி, ரூ.14 லட்சத்து 43 ஆயிரம் செலவில் கிராமசேவை மையம் கட்டும் பணி ஆகியவற்றையும் கலெக்டர் ஹரிகரன் பார்வையிட்டார்.

 
இதையடுத்து கலெக்டர் ஹரிகரன் கூறியதாவது:–
பசுமைவீடுகள் திண்டுக்கல் மாவட்டத்தில் 2014–2015–ம் ஆண்டில் சூரிய சக்தியுடன் கூடிய 2 ஆயிரத்து 172 பசுமை வீடுகள் கட்டப்படுகின்றன. இதில் 635 வீடுகள் ரூ.27 கோடியே 36 லட்சம் செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. நெசவாளர்களுக்கு 115 பசுமை வீடுகள் ரூ.2 கோடியே 65 லட்சம் செலவில் கட்டப்பட்டு வருகின்றன.
மேலும் தாய் திட்டத்தின் கீழ் ரூ.19 கோடியே 46 லட்சம் மதிப்பில் 2,556 பணிகளும், இந்திராகாந்தி நினைவு குடியிருப்பு திட்டத்தில் ரூ.14 கோடியே 40 லட்சம் மதிப்பில் 1,200 பணிகளும், 13–வது நிதிக்குழு மானிய திட்டத்தில் ரூ.6 கோடியே 60 லட்சம் மதிப்பில் 30 பணிகளும் நடக்கின்றன.
ரூ.265 கோடியில் பணிகள் நிர்மல்பாரத் அபியான் திட்டத்தில் தனிநபர் இல்ல கழிப்பறை கட்டுவதற்கு 74 ஆயிரத்து 311 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதில் 4,473 பேருக்கு ரூ.4 கோடியே 65 லட்சம் செலவில் கழிப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. ஊராட்சி ஒன்றிய பொதுநிதி திட்டத்தில் ரூ.19 கோடியே 30 லட்சம் செலவில் 781 பணிகளும், ஊரக கட்டமைப்பு திட்டத்தில் ரூ.3 கோடியே 63 லட்சத்தில் 240 பணிகளும் நடக்கின்றன.
மழைநீர் சேகரிப்பு திட்டத்தில் ரூ.4 கோடியே 32 லட்சத்தில் 5 ஆயிரத்து 165 பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிதிஆண்டில் ஊரக வளர்ச்சித்துறை மூலம் ரூ.265 கோடியே 96 லட்சம் மதிப்பில் 89 ஆயிரத்து 493 வளர்ச்சி பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது. இதில் 14 ஆயிரத்து 671 பணிகள் நிறைவுபெற்றுள்ளன. மீதமுள்ள பணிகள் நடைபெற்று வருகின்றன.
இவ்வாறு கலெக்டர் ஹரிகரன் கூறினார்.
இந்த ஆய்வின் போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாண்டியராஜன், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் கமலாதேவி, துணைத் தலைவர் லோகநாதன், திண்டுக்கல் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சேகர், கிரிராஜன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சாலிதளபதி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.