தொப்பம்பட்டி: பழநி அருகே தொப்பம்பட்டி மாட்டுத்தாவணி சந்தையில்
ரூ.30ஆயிரம் முதல் 2 லட்ச ரூபாய் வரை மாடுகள் விற்கப்படுகிறது.
தொப்பம்பட்டி அங்காளம்மன் கோயிலில் ஆண்டுதோறும் ஆடித்திருவிழாவில்
மாட்டுத்தாவணி நடக்கிறது. நேற்றுமுன்தினம் (ஆக.,2 முதல் 5 வரை) துவங்கி
தொடர்ந்து 4 நாட்கள் நடக்கிறது. இதற்காக இரண்டு தினங்களக்கு முன்பாகவே
மாடுகள் வரத்து வங்கிவிட்டன. இதில், காங்கேயம், பொள்ளாச்சி, தாராபுரம்,
ஒட்டன்சத்திரம், உசிலம்பட்டி, உடுமலை உள்பட பல்வேறு இடங்களில் மாடுகளை
கொண்டுவந்திருந்தனர். மாட்டுத்தாவணியில் மாடுகளுக்கான பல வண்ணக்கயிறு,
சாட்டை, பெயின்ட் மற்றும் மண்வெட்டி, அருவாள்போன்ற விவசாயப் பொருட்கள்
விற்கப்படுகிறது. அதிகபட்சமாக ரூ.2 லட்சம் ரூபாய் வரை காங்கேயம் காளைகள்
விற்பனைக்கு வந்துள்ளன.
உசிலம்பட்டி கருப்பசாமி கூறுகையில்,"" இவ்வாண்டு இரண்டு காங்கேயம் காளைகள் கொண்டுவந்துள்ளேன். விலை ரூ.1.25 லட்சம் முதல் ரூ.1.50 வரை விற்கும் என எதிர்பார்க்கிறோம்,'' என்றார்.
உசிலம்பட்டி கருப்பசாமி கூறுகையில்,"" இவ்வாண்டு இரண்டு காங்கேயம் காளைகள் கொண்டுவந்துள்ளேன். விலை ரூ.1.25 லட்சம் முதல் ரூ.1.50 வரை விற்கும் என எதிர்பார்க்கிறோம்,'' என்றார்.
No comments:
Post a Comment