கொடைக்கானல்: கொடைக்கானலில் 54 வது மலர் கண்காட்சி விழா மற்றும் கோடைவிழா
நேற்று மழையோடு துவங்கியது. விழாவிற்கு திண்டுக்கல் மாவட்ட கலெக்டர்
ஹரிஹரன் தலைமை வகித்தார். கோடைவிழாவை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் துவக்கி
வைத்தார். இதில் அமைச்சர்கள் சண்முகநாதன், வைத்திலிங்கம் பங்கேற்றனர்.
விழாவில் தையல் மெஷின், Œலவை பெட்டி, மிக்சி வழங்கப்பட்டன. உதயகுமார்
எம்.பி., வேணுகோபாலு எம்.எல்.ஏ., நகராட்சி தலைவர் ஸ்ரீதர், கமிஷனர்
காளிமுத்து, அ.தி.மு.க., மாவட்ட பிரதிநிதி வீரராஜேஷ் கண்ணா, மேல்மலை
ஜெ.,பேரவை செயலாளர் சிவாஜி, ஒன்றிய செயலாளர் முருகன், வில்பட்டி ஊராட்சி
தலைவர் மலைச்சாமி, நகர ஜெ., பேரவை துணை செயலாளர் செல்வம், மீனவர் அணி
செயலாளர் ஆரோக்யசாமி, இளைஞரணி துணை செயலாளர் பரமசிவம் கலந்து கொண்டனர்.
அதிகாரிகள்: மாவட்ட வருவாய் அலுவலர் நாகேந்திரன், ஆர்.டி.ஓ. சுரேஷ், வன
அலுவலர்கள் சம்பத், வெங்கடேசன், தோட்டக்கலை துணை இயக்குனர் பாண்டி, ஊரக
வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாண்டியராஜன், சுற்றுலா அலுவலர் குணசேகரன்
பங்கேற்றனர்.
No comments:
Post a Comment