Tuesday, 4 August 2015

டிசம்பருக்குள் "ஆன் லைனில்' கூட்டுறவு வங்கிகள்

திண்டுக்கல்:தமிழகத்தில் வரும் டிசம்பருக்குள் அனைத்து கூட்டுறவு வங்கிகளும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு, "ஆன் லைனில்' இணைக்கப்பட உள்ளது. தமிழகத்தின் 32 மாவட்டங்களில் 4 ,500 தொடக்க விவசாய கூட்டுறவு வங்கிகள் உள்ளன. இவை அனைத்தும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டுள்ளது. அனைத்து ஆவணங்களையும் கம்ப்யூட்டரில் பதிவு செய்து, பராமரிப்பதற்கு கூட்டுறவு பணியாளர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த வங்கிகள் அனைத்தும் வரும் டிசம்பருக்குள் ஆன் லைனில் இணைக்கப்பட உள்ளன. அனைத்து விவசாய தொடக்க கூட்டுறவு வங்கிகளிலும் கிட்டங்கிகள் அமைப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் 2,500 கிட்டங்கிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. இந்த கிட்டங்கிகளில் அறுவடை நேரத்தில் விலை இல்லாதபோது, தானியங்களை விவசாயிகள் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம். தானிய அடமான கடன் பெற்றுக் கொள்வதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
கூட்டுறவு இணைப்பதிவாளர் பழனி@வலு கூறியதாவது; விவசாய தொடக்க கூட்டுறவு வங்கிகளில் கம்ப்யூட்டர் மயமாக்குதல் இறுதி கட்டத்தை அடைந்து விட்டது. கிட்டங்கிகளை விவசாயிகள் பயன்படுத்தினால் விலை மதிப்பில் 75 சதவீதம் கடன் வழங்கப்படும். விவசாயிகளுக்கு தேவையான அனைத்து உரங்களும் வழங்கப்படும். வாடிக்கையாளர்களுக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளை போல பணிகளை துரிதப்படுத்த உள்ளோம், என்றார்.

No comments:

Post a Comment