Friday, 21 November 2014

மண்டல அளவிலான கூடைப்பந்து போட்டி










                       


திண்டுக்கல் : பள்ளி மாணவர்களுக்கு இடையே மண்டல அளவிலான கூடைப்பந்து போட்டி திண்டுக்கல் எஸ்.எஸ்.எம்., பொறியியல் கல்லூரியில் நடந்தது.
கல்லூரி வளாக இயக்குனர் சந்திரன் துவக்கி வைத்தார். திண்டுக்கல், தேனி மாவட்டங்களை சேர்ந்த 16 அணிகள் பங்கேற்றன. ஆண்கள் பிரிவில் 17 வயதிற்குட்பட்டோருக்கான போட்டியில் திண்டுக்கல் எம்.எஸ்.பி., பள்ளி அணி முதலிடத்தை பிடித்தது. பெரியகுளம் பி.வி.எம்., பள்ளி 2 ம் இடத்தையும், கொடைக்கானல் புனித பீட்டர்ஸ் பள்ளி அணி 3 ம் இடத்தையும் பிடித்தன. 19 வயதிற்குட்பட்டோருக்கான போட்டியில் திண்டுக்கல் எம். எஸ்.பி., பள்ளி அணி முதலிடம் பிடித்தது. கொடைக்கானல் புனித பீட்டர்ஸ் பள்ளி அணி 2 ம் இடத்தையும், பெரியகுளம் வி.எம்., அரசு பள்ளி 3 ம் இடத்தையும் பிடித்தன. பெண்கள் பிரிவில் 17 வயதிற்குட்பட்டோருக்கான போட்டியில் திண்டுக்கல் அவர்லேடி பள்ளி அணி முதலிடம் பிடித்தது. பெரியகுளம் அரசு பெண்கள் பள்ளி அணி 2 ம் இடத்தையும், பழநி அக்சயா பள்ளி 3 ம் இடத்தையும் பிடித்தன.19 வயதிற்குட்பட்டோருக்கான போட்டியில் பெரியகுளம் அரசு பள்ளி அணி முதலிடத்தை பிடித்தது. திண்டுக்கல் புனித வளனார் பெண்கள் பள்ளி 2 ம் இடத்தையும், கம்பம் அரசு பெண்கள் பள்ளி 3 ம் இடத்தையும் பிடித்தன. வெற்றி பெற்ற அணிகளுக்கு கல்லூரி முதல்வர் பழனிச்சாமி பரிசுகளை வழங்கினார். போட்டி ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குனர் கோகுல் செய்திருந்தார்.


மண்டல அளவிலான புதிய விளையாட்டு போட்டிகள்

         
 





திண்டுக்கல் : கல்வித்துறை சார்பில் மண்டல அளவிலான புதிய விளையாட்டு போட்டிகள் திண்டுக்கல்லில் நடந்தது.
முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி துவக்கி வைத்தார். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் பழனிச்சாமி முன்னிலை வகித்தார். மாவட்ட சிலம்பாட்ட கழக தலைவர் சுந்தரராஜன், இந்திய சிலம்பம் சம்மேளன உதவித்தலைவர் மோகன் கலந்து கொண்டனர். இதில் ஜிம்னாஸ்டிக், சிலம்பம், வாள் சண்டை போட்டிகள் அச்யுதா பள்ளியிலும், கேரம் போட்டி எஸ்.எம்.பி., பள்ளியிலும் நடந்தன. திண்டுக்கல், தேனி மாவட்டங்களை சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இதில் முதல் மூன்று இடங்களை பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முதலிடங்களை பிடித்த மாணவர்கள் சேலத்தில் நவ., 26 ல் நடக்க உள்ள மாநில போட்டிக்கு அழைத்து செல்லப்பட உள்ளனர்.

செஸ் போட்டியில் முதலிடம்

திண்டுக்கல் : பள்ளி கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான செஸ் போட்டி சென்னையில் நடந்தது. திண்டுக்கல் எம்.எஸ்.பி., மேல்நிலைப்பள்ளி மாணவர் ஜெயசூர்யா முதலிடம் பிடித்துள்ளார். வெற்றி பெற்ற மாணவரை கலெக்டர் வெங்கடாசலம், திண்டுக்கல் நாடார் உறவின்முறை தலைவர் கனகசபை, பள்ளி தாளாளர் முருகேசன், இணை செயலாளர்கள் ரவீந்திரன், கமலநாதன், பொருளாளர் பட்டுமணி, தலைமைஆசிரியர் ராஜேந்திரன், உடற்கல்வி இயக்குனர் கணேசன் பாராட்டினர்.

புத்தக விழாவிற்கு முன்னோட்டம்; மாரத்தானில் மாணவர்கள் பங்கேற்பு

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் துவங்க இருக்கும் புத்தக விழாவை முன்னிட்டு இன்று பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்கும் மாரத்தான் போட்டி நடத்தப்படுகிறது.
திண்டுக்கல் இலக்கியக் களம் சார்பில் மூன்றாவது புத்தக விழா நவ., 28ல் துவங்கி டிச.,7 வரை டட்லி மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது. நூற்றுக்கும் மேற்பட்ட அரங்குகள், பல லட்சம் புத்தகங்கள் இடம் பெறுகின்றன. கலைஞர்களின் உரை, சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர்களுடன் சந்திப்பு, மாவட்டத்தில் பல்வேறு துறைகளில் சிறந்து விளக்குபவர்களுக்கு பாராட்டு, நூல் வெளியீடுகள், விவாத மேடைகள், குழந்தைகள் நடனம், ஓவியம், மாறுவேடப்போட்டிகள், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரை, கவிதை மற்றும் பேச்சுப்போட்டிகள், வினாடி வினா போட்டிகள் நடக்கிறது.மாரத்தான்: இலக்கியகளம் சார்பில் இன்று மாரத்தான் போட்டி நடக்கிறது. பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்கின்றனர். வேடசந்தூர் ரோடு, குஜிலியம்பாறை, திருச்சிரோடு, சிலுவத்தூர் ரோடு, வத்தலக்குண்டு ரோடு, மதுரை ரோடு, பழநிரோடு, நத்தம் ரோட்டில் இருந்து மாரத்தான் ஓட்டங்கள் காலை 7 மணிக்கு ஒரே நேரத்தில் துவங்கி 8 மணிக்கு திண்டுக்கல் டட்லி மேல்நிலைப்பள்ளியில் முடிவடைகிறது.

கொடைக்கானல் ஏரியில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரையை அகற்றும் பணி


 

கொடைக்கானல்,

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஏரியில் கடந்த மாதங்களில் பெய்த மழை காரணமாக தண்ணீர் நிரம்பி வழிகிறது. இருந்த போதிலும் ஏரியின் உட்புறத்தில் நீர்த்தாவரங்கள், ஆகாய தாமரை செடிகள் வளர்ந்து வருகின்றன. இதனால் ஏரியின் அழகு கெடுவதோடு சுகாதார கேடும் ஏற்படுகிறது. எனவே இவற்றை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையொட்டி நேற்று கொடைக்கானல் ஏரியில் வளர்ந்து வரும் நீர்த்தாவரங்களை அகற்றும் பணி தொடங்கியது. இதை நகரசபை தலைவர் எம்.ஸ்ரீதர் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர்(பொறுப்பு) சரவணக்குமார், நகர்நல அலுவலர் ராம்குமார், சுகாதார ஆய்வாளர்கள் தங்கப்பாண்டி, ராஜாமணிகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த பணி தொடர்ந்து நடைபெற்று ஏரியின் சுகாதாரம் காக்கப்படும் என்று நகரசபை தலைவர் ஸ்ரீதர் கூறினார்.

Wednesday, 19 November 2014

இலக்கியகளம் சார்பில் கவிதைப்போட்டி வெற்றி மாணவர்களுக்கு புத்தகத்திருவிழாவில் பரிசு

திண்டுக்கல், : திண்டுக்கல்லில் இலக்கியக்களம் சார்பில் 3வது புத்தகத்திருவிழா வரும் 28ம் தேதி துவங்க உள்ளது. இதற்காக மாணவ, மாணவியர்க்கு கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் வெற்றிபெற்றவர்களுக்கு புத்தகத் திருவிழாவில் பரிசு கள் வழங்கப்பட உள்ளது.
இதில் 6,7,8ம் வகுப்பு மாணவர்களுக்கு இடைநிலைப்பிரிவாகவும், 9,10ம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்நிலைப்பிரிவாகவும், 11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு மேல்நிலைப்பிரிவாகவும், கல்லூரி மாணவர்களுக்கு தனிப்பிரிவாக வும் போட்டிகள் நடைபெற் றன. இதில் கவிதை போட் டியில் அனைத்து பிரிவுகளிலும் முதல் 3 இடங்களை பெற்றவர்கள் விபரம்:
இடைநிலைப்பிரிவு: சிங்கராயர்(வித்யாபார்த்தி), யாஸ்மின்(ஹோலிகிராஸ்), பவித்ரா(ஸ்ரீசாவித்ரி வித்யாசாலா), உயர்நிலைப்பிரிவு: ஹேமலதா(அண்ணாமலையார்), ஹேமலதா(மீனாட்சி), சத்தியலட்சுமி(எம்விஎம்), மேல்நிலைப்பிரிவு: அங்காளஈஸ்வரி(புனிதவளனார்), ஜோதிவேல்(புனிதமரியன்னை), சாலினி(புனிதவளனார்), கல்லூரிப்பிரிவு: சாருமதி(சக்தி மகளிர் கல்லூரி-ஒட்டன்சத்திரம்), மேரிஜாக்குலின்(அம்மன் கலை, அறிவியல் கல்லூரி), செந்தில்குமார்(பழநியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக்கல்லூரி-பழநி) ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். இவர்களுக்கு புத்தகத்திருவிழாவில் பரிசளிக்கப்பட உள்ளது என்று இலக்கியகள தலைவர் குருவம்மாள், செயலாளர் ராமமூர்த்தி, பொருளாளர் மணிவண்ணன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

திண்டுக்கல் ரயில் நிலையத்தில் பேட்டரி கார் இயக்க வர்த்தகர்கள் கோரிக்கை

திண்டுக்கல், : திண்டுக்கல் ரயில் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள், முதியவர்களுக்காக பேட்டரி கார்களை இயக்க வேண்டும் என்று மாவட்ட தொழில் வர்த்தகர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக சங்கத்தின் தலைவர் கிருபாகரன், செயலாளர் மங்களம்அழகு, பொருளாளர் முகமதுகனி ஆகியோர் ரயில்வே பொதுமேலாளரிடம் அளித்துள்ள மனு விபரம்: திண்டுக்கல் ரயில்நிலையத்தில் தொடுதிரை செயல்படாமல் உள்ளது. சுரங்கப்பாதையில் துர்நாற்றம் மற்றும் மழைநீர் மேற்கூரையில் இருந்து ஒழுகுகிறது. ரயில்பெட்டி நிற்கும் இடத்திற்கான டிஜிட்டல் பலகை வேலை செய்யவில்லை.
முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரி கார்களை இயக்க வேண் டும். சென்னை, பெங்களூருவிற்கு முன்பதிவு இல்லாத புதிய ரயில்களை இயக்க வேண்டும். ரயில்வே குட் செட்டை அங்குநகர் பகுதி க்கு மாற்ற வேண்டும். ரயில்நிலையத்தில் விசார ணை கவுன்ட்டர் அமைக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் திண்டுக்கல் மாநகராட்சியில் மக்கள் சேவை மையம்

திண்டுக்கல், : நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் மாநகராட்சியில் மக்கள் சேவை மையம் இன்று(19ம் தேதி) முதல் துவங்க உள்ளது. மேயர் மருதராஜ் துவக்கி வைக்கிறார்.
மாநகராட்சியில் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், வர்த்தக உரிமங்கள், பாதாள சாக்கடை குழாய் இணைப்புகள், குடிநீர் குழாய் இணைப்புகள், தொழில்வரி, காலிமனைவரி, சொத்துவரி விதித்தல், கட்டிட அனுமதி மற்றும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு விரைவில் கிடைக்கும் வகையில் இம்மையம் செயல்படும். ஒவ்வொரு புதன் அன்றும் காலை 11 முதல் பிற்பகல் 1 மணி வரை மனுக்கள், விண்ணப்பங்கள் பெறப்பட்டு தீர்வு காணப்படும்.
எனவே இம்மையத்தை பொதுமக்கள் உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மாநகராட்சி ஆணையர் ராஜன் தெரிவித்துள்ளார்.

ஆக்கிரமிப்பால் நிறையாமல் போன காவேரியம்மாபட்டி பெரிய குளம்

ஒட்டன்சத்திரம் ஒன்றியத்தில் காவேரியம்மாபட்டி பெரிய குளம் அமைந்துள்ளது. குளம்நிரம்பி மறுகால் சென்றால், குளத்தை நம்பி உள்ள காவேரியம்மாபட்டி, அணைப்பட்டி, இறையகவுண்டன்புதூர், அத்தப்பகவுண்டன்புதூர் பகுதிகளில் உள்ள ஆயிரம் ஏக்கர் நிலத்திற்கு கிணற்றுப்பாசனம் கிடைக்கும். நீராதாரம்: விருப்பாட்சியில் உள்ள பெருமாள்குளம் நிரம்பி மறுகால் சென்றால்தான் இக்குளத்திற்கு நீர்வரத்து ஏற்படும். கடந்த மாதம் பெய்த பலத்த மழைகாரணமாக பரப்பலாறு அணை ஒரே நாளில் அதன் முழு கொள்ளவை எட்டியது.
இதனால் உபரி நீர் பெருமாள் குளத்திற்கு திறந்து விடப்பட்டது.

இதன் வரத்து கால்வாய் சீரமைக்கப்படாததால், வெள்ளநீர் கால்வாயை ஓடைத்துக் கொண்டு அருகிலுள்ள தோட்டங்களுக்கு சென்றது. இதனால் பெருமாள்குளம் நீர்வரத்தின்றி காணப்பட்டது. உடைப்பு ஏற்பட்ட பகுதிகள்செப்பனிடப்பட்ட பின்பு, பரப்பலாறு அணை நீர் பெருமாள்குளத்திற்கு திறந்துவிடப்பட்டது. இதற்குள் அணைக்கு நீர்வரத்து குறைந்தது.
ஏமாற்றம்: மழைகாலத்திற்கு முன்பே வரத்துக் கால்வாய் தூர்வாரப்பட்டு செப்பனிடப்பட்டு இருந்தால், இந்நேரம் பெருமாள்குளம் நிரம்பி மறுகால் சென்று, காவேரியம்மாபட்டி குளத்திற்கு நீர்வரத்து ஏற்பட்டிருக்கும். இதன் மூலம் குளத்தை சுற்றி உள்ள கிணறுகளிலும் நீர் மட்டம் உயர்ந்து இருக்கும். இதனால் வேளாண்தொழில் சுறுசுறுப்படைந்திருக்கும் என்று இப்பகுதி விவசாயிகள் ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.
ஆக்கிரமிப்பு: பல ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இக்குளத்தின் வரத்து கால்வாய் முழுவதும் முட்செடிகள் மற்றும் ஆக்கிரமிப்பு காரணமாக மழைநீர் வருவது தடுக்கப்பட்டுள்ளது.
குளத்தில் வரையறையின்றி மண் அள்ளப்பட்டு, பெரும் பள்ளங்கள் உள்ளதால் குளத்திற்கு வரும் நீர் வெகுநாட்களுக்கு தாக்குப்பிடிக்காது.

விவசாயிகள் கருத்துகள்:எம்.மாரியப்பன், காவேரியம்மாபட்டி: இக்குளத்தின் நீரை நம்பித்தான் சுற்றி உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்கிறோம். மழை சரிவர பெய்யாமல் போனதாலும், பெய்யும் சிறிதளவு மழைநீரும், வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பு காரணமாக வழியிலேயே தடுக்கப்பட்டு வீணாவதாலும் கடந்த 2 ஆண்டுகளாக நீரின்றி காய்ந்து கிடக்கிறது. இக்குளத்தின் ஒரே நீராதாரம் பெருமாள்குளம் நீர் மறுகால் செல்வதின் மூலமும், இடைப்பட்ட பகுதிகளில் பெய்யும் மழைநீரும் ஆகும்.
மருதநாயகம், காவேரியம்மாபட்டி: சின்னகரட்டுப்பட்டியில் இருந்து வரும் வாய்க்கால் பராமரிப்பின்றி உ<ள்ளது. வாய்காலின் பல இடங்கள் இடிந்து <உள்ளது. இடிந்துள்ள பகுதிகள் வழியாக மழைநீர் வெளியேறி வீணாகி விடுவதால் குளத்திற்கு நீர் வந்து சேருவதில் சிக்கல் உள்ளது. இதனை செப்பனிட்டு நீர் வீணாவதை தடுக்க வேண்டும். வரத்துக்கால்வாய் மற்றும் குளத்தில் மண் அள்ளுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பி.ஹரிகரன், காவேரியம்மாபட்டி: நீர்வரத்திற்கு பெருமாள்குளத்தை நம்பி இருக்காமல் மாற்று திட்டங்களை செயல்படுத்த வேண்டும். பரப்பலாறு அணைநீர் நேரிடையாக இக்குளத்திற்கு வரும்படி வாய்க்கால் அமைக்க வேண்டும். இதனால் பெருமாள் குளம் நிரம்பும் வரை காத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படாது. விரைவில் குளம் நிரம்பும் வாய்ப்பு ஏற்படும். குளத்தின் வரத்து கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, அதனை செப்பனிட வேண்டும். குளத்தில் முட்செடிகள் அதிகமாக வளர்ந்துள்ளன. இதனை வெட்டி அப்புறப்படுத்தினால்தான் குளத்திற்கு வரும் நீரானது, சில காலம் வற்றாமல் தாக்குப் பிடிக்கும்.
             
எல்.திருமூர்த்தி: பெருமாள் குளத்திற்கு நீர் கொண்டு வரும் வாய்க்கால் மழைநீரால் அடித்துச் செல்லப்பட்டது. இதன் மூலம் அதிகப்படியான நீர் வீணாகி விளைநில்களுக்கு சென்றது.
வாய்க்காலை சீரமைத்து பல நாட்கள் கழித்தே பெருமாள் குளத்திற்கு பரப்பலாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது. மழை காலத்திற்கு முன்பே உடைந்த பகுதிகளை செப்பனிட்டு, தூர்வாரி இருந்தால் பெருமாள்குளம் நிரம்பியிருக்கும். இதன்மூலம் இந்த குளத்திற்கு நீர்வரத்து ஏற்பட்டிருக்கும். கிணறுகளிலும் நீர்மட்டம் உயர்ந்திருக்கும்,என்றார்.

அடிக்கடி பழுதாகும் மின் மோட்டார்கள்: மக்கள் அவதி

குஜிலியம்பாறை:ஆர்.வெள்ளோடு ஊராட்சி பகுதியில், விவசாய மின் மோட்டார்கள் அடிக்கடி பழுதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.சத்திரப்பட்டி துணை மின் நிலையத்தில் இருந்து, ஆர்.வெள்ளோடு, திருக்கூர்ணம் ஊராட்சி பகுதிகளுக்கு ஒரு மின் லைன் விநியோகமும், கூம்பூர் ஊராட்சி பாம்புலுபட்டி வரை ஒரு மின் லைன் விநியோகமும் செல்கிறது. இதில், ஆர்.வெள்ளோடு, திருக்கூர்ணம் ஊராட்சி பகுதிகளுக்கு செல்லும் லைனில் மின்சாரத்தை சீராக்கும் "பிரேக்கர் பாக்ஸ்' (வேகத்தடுப்பு பெட்டி) பழுது ஏற்பட்டுள்ளது. இதனால் அடிக்கடி மின் மின் மோட்டார்கள் ஓட்டம் தடைபடுகிறது. பல மோட்டார்கள் "ரிவேர்ஸ்சில்' சுற்றுகின்றன. மின் மோட்டார்கள் பழுதாகும் விவசாயிகள் அவதிப்படுகின்றனர். திருக்கூர்ணம் ஊராட்சி தலைவர் ராஜகோபால் கூறியதாவது; "பிரேக்கர் பாக்ஸ்' பழுதாகி பத்து நாட்களாகிறது. அதை சரி செய்ய காலதாமதம் செய்கின்றனர். இதனால், பாம்புலுபட்டி பீடரில் மாட்டி, திருக்கூர்ணம், பாம்புலுபட்டி இரண்டுக்கும் ஒரே இணைப்பு கொடுத்துள்ளனர். இதனால், அடிக்கடி மின் மோட்டார்கள் பழுதாகின்றன. மின் விநியோகத்தை சீராக்க, மின் துறையினர் முன்வர வேண்டும்.

மழையால் காபிபழங்கள் வெடிப்பு:விவசாயிகள் பாதிப்பு

தாண்டிக்குடி:தாண்டிக்குடி மலைப்பகுதியில் தொடர் மழையால் காபி பழங்கள் வெடிப்பு ஏற்பட்டு உதிர்ந்து வருகிறது.மலைப்பகுதியில் 30 ஆயிரம் ஏக்கர் பரப்பில் காபி விவசாயம் செய்யப்படுகிறது. அக்டோபரில் துவங்கும் சீசன் ஜனவரி வரை நீடிக்கும். தற்போது பருவ மழை தீவிரமடைந்து, கடந்த சில வாரங்களுக்கு முன் கனமழை கொட்டித் தீர்த்தது. சில தினங்களாக மிதமான மழை மாலை நேரத்தில் பெய்து வருகிறது. அவ்வப் போது சுட்டெரிக்கும் வெயில், பனிப்பொழிவு, பின் மழை பெய்வது என சீதோஷ்ண நிலை மாறிய நிலையில் உள்ளது. இதனால் பறிக்கும் தருவாயில் உள்ள காபி பழங்களில் வெடிப்பு ஏற்பட்டு உதிர்கிறது. இது விவசாயிகளுக்கு இரட்டிப்பு செலவை ஏற்படுத்துகிறது. உதிர்ந்த பழங்களை சேகரிப்பதில் கால விரயமும் உண்டாகிறது.
                                  






இதுகுறித்து காபி விவசாயிகள் கூறுகையில்: கடந்த சில ஆண்டுகளாக பருவ மழை பொய்த்து காபி விவசாயம் பாதித்தது. நடப்பாண்டிலும் பூக்கும் தருணத்தில் மழையின்றி மகசூல் பாதியாக குறைந்துள்ளது. காபி விலை ஏற்றம், இறக்கம் காணும் நிலையில் கூலியாட்களின் சம்பளம் அதிகரித்துள்ளது. தொடர் மழையால் பழங்கள் வெடிப்பு ஏற்பட்டு உதிர்கிறது.
இதை சேகரிப்பதற்கு கூடுதல் செலவு ஏற்படுகிறது. காபி வாரியம் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், என்றனர்.

விழிப்புணர்வு முகாம்

கன்னிவாடி:தருமத்துப்பட்டி ஊராட்சி அலுவலகத்தில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. ஊராட்சி தலைவர் முத்துப்பிள்ளை மகேந்திரன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் சக்திவேல் முன்னிலை வகித்தார். செயலர் இன்னாசி வரவேற்றார். டெங்கு பரவலுக்கான வாய்ப்புகள், அறிகுறி, தடுப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சுகாதார ஆய்வாளர்கள் சுந்தரம், கோபாலகிருஷ்ணன் பேசினர். ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், மகளிர்சுய உதவிக்குழுவினர், குடிநீர்த்தொட்டி ஆபரேட்டர்கள் பங்கேற்றனர்.

பச்சை மிளகாய் விலை குறைவு



                    
 


திண்டுக்கல்:கடந்த இரண்டு வாரங்களாக ரூ.70 க்கு விற்ற பச்சைமிளகாய், இந்த வாரத்தில் விலை குறைந்து கிலோ ரூ.30 விற்பனையானது.திண்டுக்கல் மாவட்டம் முழுவதும், பச்சை மிளகாய் 1204 எக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது. திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டிற்கு தினமும் உள்ளூர் வெங்காயம் 1100 கிலோவும், 900 கிலோ பச்சைமிளகாய் திருப்பூரிலிருந்தும் விற்பனைக்கு வருகிறது. வாரத்தின் மூன்று நாட்களில் 2 டன் அளவிற்கு திருப்பூர், உடுமலை பேட்டையிலிருந்து பச்சைமிளகாய் விற்பனைக்கு வருகிறது. கடந்த சில வாரங்களாக வரத்துக்குறைவால் ஒரு கிலோ பச்சை மிளகாய் ரூ.70 விற்பனையானது. தற்போது வரத்து அதிகரித்திருப்பதால் கிலோ ரூ.30 வரை குறைந்தது. காந்தி மார்கெட் வியாபாரி பழனிச்சாமி கூறுகையில் "" செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் உடுமலை சீசன் துவங்கி விடும். அதற்கடுத்த மாதங்களில் திருப்பூரிலிருந்து பச்சைமிளகாய் வரத்து இருக்கும். தொடர்ந்து மழை பெய்ததால் மிளகாய் சிதிலமடையும் அல்லது செடியிலேயே உதிர்ந்து விடும், வரத்து இருக்காது. இந்த நேரத்தில் விலை உயரும். தற்போது திருப்பூர், உடுமலை பச்சைமிளகாய் வரத்து அதிகரித்திருப்பதால் விலை குறைந்துள்ளது'' என்றார்.

அடர் தீவன பயிற்சி

     
 


தாண்டிக்குடி:தாண்டிக்குடியில் கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு ஆத்மா திட்டத்தின் கீழ் அடர் தீவனம் தயாரிக்கும் பயிற்சி நடந்தது.கொடைக்கானல் வட்டார ஆத்மா திட்ட தலைவர் ரவிச்சந்திரன் தலை மை வகித்தார். தாண்டிக்குடி கால்நடை டாக்டர் அருண் விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கினார். உளுந்தம் பொட்டு, சோளம் மாவு, புண்ணாக்கு, தவிடு, உப்பு, மல்டி விட்டமின் ஆகியவற்றை விகிதாசாரப்படி கலப்பதால் கால்நடைகளுக்கு தேவையான புரோட்டீன், கார்போ ஹைட்ரேட் கிடைப்பதோடு தரமான பால் உற்பத்தி பெருக்க முடியும் என பயிற்சியில் விளக்கப்பட்டது.ஆத்மா திட்ட மேலாளார் கார்த்தி, சிறப்பு அறிஞர் சபரீஸ்வரன், கால்நடை உதவியாளர் ஜெயந்தி, முத்து ஆகியோர் கலந்து கொண்டனர். பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு இலவசமாக அடர் தீவனம் வழங்கப்பட்டது.

மண்டல அளவிலான கபடி போட்டி

திண்டுக்கல்:பள்ளி மாணவர்களுக்கு இடையே மண்டல அளவிலான கபடி போட்டி திண்டுக்கல் எஸ்.பி.எம்., பொறியியல் கல்லூரியில் நடந்தது. இதில் திண்டுக்கல், தேனி மாவட்டங்களை சேர்ந்த 8 அணிகள் பங்கேற்றன. கல்லூரி முதல்வர் பத்மநாதன் முன்னிலை வகித்தார். கல்லூரி தலைவர் ஜெயராஜ் துவக்கி வைத்தார். 17 வயதிற்குட்பட்டோருக்கான அரையிறுதியில் உலகம்பட்டி பால்சேவியர் பள்ளி அணி, உத்தமபாளையம் ஸ்ரீகிருஷ்ணய்யர் பள்ளியைஅணியை வென்றது. மற்றொரு அரையிறுதியில் நெய்காரப்பட்டி குருவப்பா பள்ளி அணி, மைலாடும்பாறை ஜி.ஆர்.வி., பள்ளி அணியை வென்றது.

                                   

மூன்றாம் இடத்திற்கான போட்டியில் உத்தமபாளையம் ஸ்ரீகிருஷ்ணய்யர் பள்ளி அணி, மைலாடும்பாறை ஜி.ஆர்.வி., பள்ளி அணியை வென்றது. இறுதிபோட்டியில் நெய்காரப்பட்டி குருவப்பா பள்ளி அணி, உலகம்பட்டி பால்சேவியர் பள்ளி அணியை வென்று முதலிடத்தை பிடித்தது.19 வயதிற்குட்பட்டோருக்கான அரையிறுதியில் கம்பம் சி.பி.எம்., பள்ளி அணி சின்னமனூர் அரசு பள்ளி அணியை வென்றது. மற்றொரு போட்டியில் சாணார்பட்டி அரசு பள்ளி அணி, நெய்காரப்பட்டி குருவப்பா பள்ளி அணியை வென்றது. மூன்றாவது இடத்திற்கான போட்டியில் சின்னமானூர் அரசு பள்ளி அணி, நெய்காரப்பட்டி குருவப்பா பள்ளி அணியை வென்றது. உடற்கல்வி இயக்குனர் சண்முகசுந்தரம் ஏற்பாடுகளை செய்திருந்தார்.

3 டன் யூரியா இருப்பு வைக்கஉத்தரவு: தரக்கட்டுபாட்டுத்துறை அதிரடி

திண்டுக்கல்:"" பயிர் பாதுகாப்பிற்கு அனைத்து தொடக்க வேளாண்மை மற்றும் தனியார் உரக்கடைகளில் 3 டன் யூரியா உரம் கையிருப்பு வைக்க வேண்டும்'' என வேளாண் தரக்கட்டுப்பாட்டுத்துறை உதவி இயக்குனர் ரவிச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார்.திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் விவசாயிகள் அதிகளவு பயன்படுத்தும் யூரியா உரம் கடந்த சில வாரங்களாக பற்றாக்குறை நிலவியது. இதை சரிசெய்வதற்கு வேளாண் மற்றும் தரக்கட்டுப்பாட்டு துறைகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. தற்போதுதனியார் உர உற்பத்தி நிறுவனங்களான, ""மெட்ராஸ் பெர்ட்டிலைஷர் லிமிடெட் மற்றும் ஸ்பிக் உர நிறுவனம், மங்களூர் கெமிக்கல் பெர்ட்டிலைஷர்'' ஆகியவை தினசரி 4700 டன் யூரியா உற்பத்தி துவங்கியுள்ளது. இதனால் தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் நிலவும், யூரியா பற்றாக்குறை பெருமளவில் குறைந்துள்ளது.
                  




இதனையடுத்து மாவட்டத்திலுள்ள அனைத்து உர கடைகளிலும், யூரியா உரங்களை 3 டன் அளவிற்கு அந்தந்த கடைகளில் கையிருப்பு வைக்குமாறு உரக்கடை உரிமையாளர்களுக்கும், தொடக்க வேளாண் சங்க அலுவலர்களுக்கும், வேளாண் தரக்கட்டுப்பாட்டுத்துறை வலியுறுத்தியுள்ளது.இதுகுறித்து வேளாண் தரக்கட்டுப்பாட்டுத்துறை உதவி இயக்குனர் ரவிச்சந்திரன் கூறுகையில், ""திண்டுக்கல் மாவட்டத்திற்கு இரண்டாயிரத்து 925 டன் யூரியாவும், 775 டன் டி.ஏ.பி., பொட்டாசியம் 1508 டன்னும், காம்ப்ளக்ஸ் உரங்கள் 1856 டன்னும் வரவழைக்கப்பட்டு கையிருப்பு வைக்கப்பட்டுள்ளது.

400 தனியார் கடைகளில் 800 டன் அளவிற்கு யூரியா கையிருப்பு வைத்துள்ளோம். கலெக்டர் வெங்கடாசலம் தலைமையில் நடந்த ஆய்வுகூட்டத்திற்கு பின்பு, தனியார் நிறுவனங்களில் 1200 மெட்ரிக் டன் யூரியா கையிருப்பு வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. ஒருவாரத்திற்கு தேவையான அனைத்து உரங்களும் உரக்கடைகளில் இருக்குமாறு சப்ளை செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஆயிரத்து 400 மெ., டன் யூரியா உரங்கள், 197 தொடக்க வேளாண்மை சங்கங்களிலும், தனியார் நிறுவனங்களில் 1579 மெ., டன் யூரியாவும் கையிருப்பு வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் அந்தந்த பகுதிகளிலுள்ள உரக்கடைகளில் உரங் களை வாங்கி பயனடையலாம்.'' என்றார்.

'கிளவுட்' கம்ப்யூட்டிங்கில் தகவல்கள் பாதுகாக்கும் முறை கண்டுபிடிப்பு



                
                                              

திண்டுக்கல்: 'கிளவுட்' கம்ப்யூட்டிங்கில் தகவல்கள் திருடப்படுவதை தடுத்து பாதுகாக்கும் முறையை திண்டுக்கல் பேராசிரியர் கண்டறிந்துள்ளார்.

அரசு துறைகள், தனியார் நிறுவனங்கள் அனைத்தும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு வருகின்றன. கம்ப்யூட்டர்களை இயக்க 'சாப்ட்வேர்,' 'ஹார்டுவேர்' ஆகியவை அதிகளவில் தேவைப்படுகின்றன. இதனால் செலவும் அதிகரிக்கிறது. இவற்றை குறைக்க 'கிளவுட்' கம்ப்யூட்டிங் முறையை கம்ப்யூட்டர் நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. இந்த முறையில் இணையதளத்தில் இருந்து 'சாப்ட்வேர்,' 'ஹார்டுவேர்' ஆகியவற்றை பெற்று கம்ப்யூட்டரை இயக்க முடியும்.இதில் சேவை பயன்பாட்டிற்கு மட்டும் பணம் செலுத்தினால் போதும். இந்த சேவைக்காக பல கம்ப்யூட்டர் நிறுவனங்கள் தனியாக தகவல் மையங்கள் ஏற்படுத்தியுள்ளன. இதில் நாம் சேமித்து வைக்கும் தகவல்களை பாதுகாப்பதில் சிக்கல் உள்ளது. இதனால் இந்த சேவையை பெறுவதில் பலர் தயக்கம் காட்டி வருகின்றனர். மேலும் ஒரு தகவல் மையம் மூலம் எத்தனை வாடிக்கையாளர்களுக்கு சேவை அளிக்க முடியும் என நிறுவனங்களுக்கு இடையே குழப்பம் நிலவி வருகிறது.

இதை தவிர்க்கும் வழிமுறையை திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ., பொறியியல் கல்லூரி தகவல்தொழில்நுட்பத்துறை உதவி பேராசிரியர் ஜெய்கணேஷ் கண்டுபிடித்துள்ளார். அவரது கட்டுரைக்கு பெங்களூரு விஸ்வேஸ்ரய்யா பல்கலை சிறந்த ஆராய்ச்சிக்கான விருது வழங்கியுள்ளது. இவரது ஆராய்ச்சி கட்டுரையை மலேசியாவில் நடந்த சர்வதேச கருத்தரங்கில் உலக நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளன.

பேராசிரியர் ஜெய்கணேஷ் கூறியதாவது: ஒரு கம்ப்யூட்டர் தகவல் மையம் மூலம் குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டும் சேவை அளிக்க முடியும். அதிக வாடிக்கையாளர்கள் இணையும்போது, எனது கண்டுபிடிப்பு மூலம் தகவல் மையத்தின் செயல்திறனை அதிகரிக்க முடியும். மேலும் தகவல் மையத்தை தவறாக பயன்படுத்துவோர், தகவல்களை திருடுபவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க முடியும். பி.எஸ்.என்.ஏ., கல்லூரியில் பேரிடர் கம்ப்யூட்டர் தகவல் மேலாண்மை மையத்தை அமைக்க திட்டமிட்டுள்ளோம், என்றார்.

Monday, 17 November 2014

நெல் பயிர்களை தாக்கும் இலை சுருட்டு புழுக்கள்





நத்தம் : நெல் பயிர்களை தாக்கும் இலை சுருட்டு புழுக்களை ஆரம்பத்திலேயே அழிப்பதற்கான முயற்சிகளை விவசாயிகள் மேற்கொள்ள வேண்டுமென வேளாண்மை துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.நத்தம் பகுதியில் முளையூர், புன்னப்பட்டி, வேலம்பட்டி, செந்துறை, செல்லப்பநாயக்கன்பட்டி, குடகிப்பட்டியில் 60 ஏக்கர் பரப்பளவில் இறவை சாகுபடியாக நெல் நடவு செய்யப்பட்டுள்ளது. சாரல் மழை நிலவுவதால் நாற்றுகளில் இலை சுருட்டு புழுக்கள் தொற்றிக்கொண்டு பயிர்களை அழித்து வருகின்றன. இதனால் மகசூல் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.வேளாண்மை உதவி இயக்குனர் ரவிபாரதி கூறுகையில், ""விளைநிலங்களில் தேங்கியுள்ள தண்ணீரை முதலில் வெளியேற்ற வேண்டும். பின்னர் இரண்டு லிட்டர் தண்ணீரில் 2 மி.லி., மோனோகுரோட்டோபாஸ் மருந்தினை கலந்து கைத்தெளிப்பானால் நெல் பயிரில் தெளிக்க வேண்டும். இதன் மூலம் இலை சுருட்டு புழுக்களை அழிக்கலாம்,''என்றார்.