பழநி: பழநி சுப்ரமண்யா பொறியியல் கல்லூரியில் பிளஸ் 2 மாணவர்களுக்கு கல்வி
வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி தலைவர் ஜனார்த்தனன்
தலைமைவகித்தார். முதல்வர் சரவணன் முன்னிலைவகித்தார். இதில் கல்வி ஆலோசகர்
ஜெயப்பிரகாஷ் காந்தி பேசியதாவது: இன்று எல்லாத் துறைகளிலும் வேலைவாய்ப்பு
அதிகமாக உள்ளன. கண்பார்வையில்லாத பெண் ஐ.ஏ.எஸ்., படித்து சாதனை
படைக்கும்போது, நம்மால் ஏன் முடியாது. மாணவர்கள் முழுமுயற்சிசெய்தால்
சாதிக்க முடியும். பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள் கலந்தாய்வுக்கு செல்லும்
முன், அங்குசென்று துறைகளை தேர்வுசெய்வது எப்படி என முதலில் தெரிந்துகொள்ள
வேண்டும். தினமும் பத்திரிகை படித்தால், எந்த துறையில் வேலைவாய்ப்புகள்
உள்ளன என அறியலாம், என்றார்.
No comments:
Post a Comment