திண்டுக்கல்லில் விடிய, விடிய பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதில் வீடு இடிந்து விழுந்ததில் பெண் காயம் அடைந்தார்.
விடிய, விடிய மழை சுட்டெரிக்கும் வெயிலின் உச்சக்கட்டமாக கருதப்படுகிற அக்னி நட்சத்திரம் கடந்த 4–ந்தேதி தொடங்கியது. அன்றைய தினத்தில் இருந்து தற்போது வரை திண்டுக்கல் நகர் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழையும், சாரல் மழையும் பெய்து வருகிறது. திண்டுக்கல்லில், நேற்று முன்தினம் வழக்கம் போல பலத்த மழை கொட்டி தீர்த்தது.
நள்ளிரவு பெய்ய தொடங்கிய மழை விடிய, விடிய நீடித்தது. இதனால் நகரின் முக்கிய சாலைகள், தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. சில இடங்களில், சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு மழைநீரும், கழிவுநீரும் கலந்து தெருக்களில் வழிந்தோடின. திண்டுக்கல் திருமலைச்சாமிபுரம் உள்ளிட்ட நகரின் தாழ்வான பகுதிகளில் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்தது.
மின்சாரம் துண்டிப்புபலத்த மழை பெய்து கொண்டிருக்கும் போது அவ்வப்போது இடி–மின்னல் இடித்தது. சூறாவளி காற்றும் அடித்தது. இதனால் நகரின் பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. உழவு செய்த ஒரு வயல் நாற்று நடுவதற்கு தயாராக இருப்பதை போல, திண்டுக்கல் காந்திமார்க்கெட் சேறும் சகதியுமாக பரிதாபமாக காட்சி அளிக்கிறது.
திண்டுக்கல் நகரில் உள்ள சாலையோர பள்ளங்களில் மழைநீர் நிரம்பி வழிந்தது. நகரில் உள்ள குண்டும், குழியுமான சாலைகளில் மழைநீர் தேங்கி நின்றது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர். தண்ணீரை பீய்ச்சி அடித்தபடி வாகனங்கள் சென்றன. திண்டுக்கல் அருகே மாங்கரை பிரிவில் சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த ஒரு மரம் சரிந்து விழுந்தது.

மேற்கூரை விழுந்து பெண் காயம்
திண்டுக்கல் யானைத்தெப்பம் காந்திஜிபுதுரோட்டை சேர்ந்த நடராஜன்,
அவரது மனைவி பூமதி (வயது 37) மற்றும் குடும்பத்தினர் நள்ளிரவில் வீட்டில்
தூங்கி கொண்டிருந்தனர். அப்போது ஓடுகளால் வேயப்பட்ட வீட்டின் மேற்கூரை
திடீரென சரிந்து விழுந்தது.
பூமதியின் தலையில் சில ஓடுகள் விழுந்தன. இதில் அவர் காயம் அடைந்தார். திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் அளிக்கப்பட்ட சிகிச்சைக்கு பிறகு அவர் வீடு திரும்பினார்.
638 மி.மீட்டர் மழை பதிவு திண்டுக்கல் நகர் மட்டுமின்றி மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் விடிய, விடிய மழை கொட்டி தீர்த்தது. நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை பெய்த மழை அளவு (மி.மீட்டரில்) விவரம் வருமாறு:–
திண்டுக்கல்–40.40, கொடைக்கானல்–1.50, நத்தம்–2.20, நிலக்கோட்டை–4.40, பழனி–47, வேடசந்தூர்–84.70, சத்திரப்பட்டி–160, வேடசந்தூர் புகையிலை ஆராய்ச்சி மையம்–74.40, காமாட்சிபுரம்–224 மி.மீட்டரும் மழை பதிவாகி இருக்கிறது. மாவட்டம் முழுவதும் 638.60 மி.மீட்டர் மழையும், சராசரியாக 63.86 மி.மீட்டர் மழையும் பெய்துள்ளது.

No comments:
Post a Comment