Sunday, 17 May 2015

அரசன்கொடை-தாண்டிக்குடி ரோடு: வனஅலுவலர் ஆய்வு

தாண்டிக்குடி, :பத்து ஆண்டுகளுக்கு மேலாக அரசன்கொடை பகுதியினர் ரோடு வசதி கேட்டு வருகின்றனர். தற்போது கொடைக்கானல் ஒன்றியம் மூலம் ரூ.93 லட்சத்தில் புறநகர் பகுதியில் ரோடு அமைக்கும் பணி நடந்து வருகிறது. வனப்பகுதியில் எஞ்சியுள்ள இரண்டரை கி.மீ., ரோடு அமைந்தால் மட்டுமே இவர்களின் கோரிக்கை சாத்தியமாகும். திண்டுக்கல் மாவட்ட வன அலுவலர் சம்பத், அரசன்கொடை பகுதியினரை சந்தித்து வனப்பகுதியில் ரோடு அமையவுள்ள பகுதி குறித்து ஆய்வு செய்தார். வனத்துறையினரிடம் அளவீடு செய்து தரும்படி உத்தரவிட்டார். சம்பத் கூறுகையில், ""அரசன்கொடை ரோடுக்கு மத்திய அரசின் அனுமதி பெற வேண்டும். அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பெருங்கானல் பகுதி விவசாயிகளின் ரோடு அமைக்கும் கோரிக்கை குறித்தும் ஆய்வு செய்துள்ளோம்,'' என்றார்.

No comments:

Post a Comment