வடகிழக்கு பருவமழை தொடங்கியதையடுத்து தொற்றுநோய்கள் பரவுவதை தடுக்க சுகாதார துறை அதிகாரிகள் ஆலோசனை செய்தனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை வடகிழக்கு பருவ மழை தொடங்கியதையடுத்து திண்டுக்கல் மாவட்டத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்தது. இந்த மழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளன. இதுபோன்று மழைநீர் தேங்குவதால் கொசுக்கள் உற்பத்தியாகி காய்ச்சல் உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவக்கூடும். இதையொட்டி பருவ மழை காலங்களில் சுகாதாரத்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படுவது வழக்கம்.
அதன்படி நேற்று முன்தினம் சென்னை பொது சுகாதாரத்துறை துணை இயக்குநர் (கொள்ளை நோய்) டாக்டர் பாலசுப்பிரமணி, நிலக்கோட்டை, ஆத்தூர் வட்டார பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், சின்னாளபட்டி கஸ்தூரிபா மருத்துவமனை ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதன்பிறகு மாவட்ட சுகாதாரத்துறை அலுவலகத்தில் வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் தொற்றுநோய்கள் பரவுவதை தடுப்பது குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்கள். இதுகுறித்து சுகாதார பணிகள் துணை இயக்குநர் சவுண்டம்மாள் கூறியதாவது:–
தயார் நிலை தொடர் மழையினால் வெள்ளம் ஏற்பட்டு பாதிக்கப்படும் பகுதி எது? தாழ்வான பகுதி, ஆற்றின் கரையோர பகுதிகளில் உள்ள மக்கள் வசிக்கும் இடங்கள் ஆகியவை கண்டறியப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் எல்லாம் மருத்துவக்குழு அமைத்து கண்காணித்து வருகிறோம். அத்துடன் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் மருந்து, மாத்திரைகள் இருப்பு உள்ளதா? மற்றும் தற்காலிக உதவி மையங்கள் தயார் நிலையில் உள்ளதா? என்று பார்வையிட்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி இது மழை காலம் என்பதால், மழைநீர் தேங்கும் இடங்களில் கொசுக்கள் உற்பத்தி ஆகும். அவ்வாறு உற்பத்தி ஆகும் கொசுக்கள் டெங்கு காய்ச்சலை பரப்பும். அதுபோன்று நாம் வகிக்கும் இடங்களை சுற்றி உரல், பிளாஸ்டிக் டப்பா, பழைய டயர் இவற்றில் மழைநீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும். தண்ணீரை நன்கு சூடாக காய்ச்சியபிறகு ஆறவைத்து பருக வேண்டும். காய்ச்சல் வந்தால் தாமதிக்காமல் டாக்டரிடம் சென்று சிகிச்சை பெற வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:
Post a Comment