Wednesday, 19 November 2014

'கிளவுட்' கம்ப்யூட்டிங்கில் தகவல்கள் பாதுகாக்கும் முறை கண்டுபிடிப்பு



                
                                              

திண்டுக்கல்: 'கிளவுட்' கம்ப்யூட்டிங்கில் தகவல்கள் திருடப்படுவதை தடுத்து பாதுகாக்கும் முறையை திண்டுக்கல் பேராசிரியர் கண்டறிந்துள்ளார்.

அரசு துறைகள், தனியார் நிறுவனங்கள் அனைத்தும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு வருகின்றன. கம்ப்யூட்டர்களை இயக்க 'சாப்ட்வேர்,' 'ஹார்டுவேர்' ஆகியவை அதிகளவில் தேவைப்படுகின்றன. இதனால் செலவும் அதிகரிக்கிறது. இவற்றை குறைக்க 'கிளவுட்' கம்ப்யூட்டிங் முறையை கம்ப்யூட்டர் நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. இந்த முறையில் இணையதளத்தில் இருந்து 'சாப்ட்வேர்,' 'ஹார்டுவேர்' ஆகியவற்றை பெற்று கம்ப்யூட்டரை இயக்க முடியும்.இதில் சேவை பயன்பாட்டிற்கு மட்டும் பணம் செலுத்தினால் போதும். இந்த சேவைக்காக பல கம்ப்யூட்டர் நிறுவனங்கள் தனியாக தகவல் மையங்கள் ஏற்படுத்தியுள்ளன. இதில் நாம் சேமித்து வைக்கும் தகவல்களை பாதுகாப்பதில் சிக்கல் உள்ளது. இதனால் இந்த சேவையை பெறுவதில் பலர் தயக்கம் காட்டி வருகின்றனர். மேலும் ஒரு தகவல் மையம் மூலம் எத்தனை வாடிக்கையாளர்களுக்கு சேவை அளிக்க முடியும் என நிறுவனங்களுக்கு இடையே குழப்பம் நிலவி வருகிறது.

இதை தவிர்க்கும் வழிமுறையை திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ., பொறியியல் கல்லூரி தகவல்தொழில்நுட்பத்துறை உதவி பேராசிரியர் ஜெய்கணேஷ் கண்டுபிடித்துள்ளார். அவரது கட்டுரைக்கு பெங்களூரு விஸ்வேஸ்ரய்யா பல்கலை சிறந்த ஆராய்ச்சிக்கான விருது வழங்கியுள்ளது. இவரது ஆராய்ச்சி கட்டுரையை மலேசியாவில் நடந்த சர்வதேச கருத்தரங்கில் உலக நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளன.

பேராசிரியர் ஜெய்கணேஷ் கூறியதாவது: ஒரு கம்ப்யூட்டர் தகவல் மையம் மூலம் குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டும் சேவை அளிக்க முடியும். அதிக வாடிக்கையாளர்கள் இணையும்போது, எனது கண்டுபிடிப்பு மூலம் தகவல் மையத்தின் செயல்திறனை அதிகரிக்க முடியும். மேலும் தகவல் மையத்தை தவறாக பயன்படுத்துவோர், தகவல்களை திருடுபவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க முடியும். பி.எஸ்.என்.ஏ., கல்லூரியில் பேரிடர் கம்ப்யூட்டர் தகவல் மேலாண்மை மையத்தை அமைக்க திட்டமிட்டுள்ளோம், என்றார்.

No comments:

Post a Comment