திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டத்தில், 6 மாதத்தில் சிறுசேமிப்பு திட்டங்களில் 119 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்.
தபால் அலுவலகங்கள் திண்டுக்கல் மாவட்டத்தில், திண்டுக்கல், பழனி, நிலக்கோட்டை ஆகிய 3 தலைமை தபால் நிலையங்களும், 69 துணை தபால் நிலையங்களும், 385 கிராமபுற தபால் நிலையங்களும் செயல்பட்டு வருகின்றன. இந்த தபால் நிலையங்கள் மூலம் சிறுசேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நேரடியாகவும், முகவர்கள் மூலமும் சிறுசேமிப்பு திட்டத்தில் மக்கள் முதலீடு செய்து வருகிறார்கள்.
சிறுசேமிப்பு திட்டத்தின் கீழ், அஞ்சலக மாதாந்திர வருவாய் திட்டம், மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம், தேசிய சேமிப்பு பத்திரம் வெளியீடு, தேசிய சேமிப்பு பத்திரம் 9–வது வெளியீடு, 15 ஆண்டு பொது சேமநல நிதி திட்டம், அஞ்சலக தொடர் வைப்பு திட்டம், அஞ்சலக கால வைப்பு நிதி, அஞ்சலக சேமிப்பு கணக்கு ஆகிய 8 வகையான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
ரூ.119 கோடி முதலீடு இதில், அஞ்சலக சேமிப்பு கணக்கு திட்டத்தை தவிர மற்ற அனைத்து திட்டங்களிலும் 8 சதவீதத்துக்கு மேல் வட்டி வழங்கப்படுகிறது. சேமிப்பு திட்டங்களில் உச்ச வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ள திட்டங்களை தவிர மற்ற திட்டங்களில் குறைந்தபட்சம் 50 ரூபாய் முதல், அதிகபட்சமாக எவ்வளவு தொகை வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். 5 ஆண்டுகள், 10 ஆண்டுகள், 15 ஆண்டுகள் என ஒவ்வொரு திட்டத்திலும் முதிர்வு காலம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இந்த 8 திட்டங்களில், மாவட்டம் முழுவதிலும் இருந்து சுமார் 5 லட்சம் பேர் கணக்கு தொடங்கி உள்ளனர். இதுவரை, சுமார் 6 லட்சத்து 76 ஆயிரம் சிறுசேமிப்பு கணக்குகள் தொடங்கப்பட்டு உள்ளன. கடந்த 6 மாதத்தில் 26 ஆயிரத்து 672 பேர் புதிதாக கணக்கு தொடங்கி உள்ளனர். இதில், பெண்கள் மற்றும் பெண்குழந்தைகளுக்கு என நடத்தப்பட்ட 2 நாள் சிறப்பு முகாமில் 1,100 பேர் வங்கி கணக்கு தொடங்கினர்.
இதுவரை தொடங்கப்பட்டுள்ள வங்கி கணக்குகளின் அடிப்படையில், ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை 6 மாதத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் சிறுசேமிப்பு திட்டத்தில் சுமார் 119 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது என்று தபால் துறை அதிகாரி ஒருவர் கூறினார்.
மோசடி நிறுவனங்களை நம்பாதீர் அவர் மேலும் கூறும்போது, ‘சிறுசேமிப்பு திட்டத்தில் மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள் இடம் பெற்றுள்ளன. ஏழை, பணக்காரர் என எவரும் முதலீடு செய்யும் வகையில் திட்டங்கள் உள்ளன. மோசடி நிறுவனங்களை நம்பி ஏமாறுவதை விட, சிறுசேமிப்பு திட்டத்தில் பங்கு பெற்று பெரிதும் மக்கள் பயன்பெறலாம். பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படும்பட்சத்தில் கணக்குகளின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும். சிறுசேமிப்பு திட்டங்களில் உள்ள பயன்களை தெரிந்துகொண்டு, இதில் முதலீடு செய்ய பொதுமக்கள் ஆர்வம்காட்ட வேண்டும்’ என்றார்.
முகவர்களுக்கு ஊக்கத்தொகை குறைப்புசேமிப்பு திட்டங்களில் மக்களை இணைக்கும் வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில், சுமார் 990 மகளிர் முகவர்களும், 200 நிலை முகவர்களும் உள்ளனர். இதில், மகளிர் முகவர்களுக்கு மத்திய அரசு 4 சதவீதம் வட்டியும், நிலை முகவர்களுக்கு ½ சதவீதம் வட்டியும் வழங்கி வருகிறது. ஆனால், 2012–ம் ஆண்டு மார்ச் மாதம் வரை மகளிர் முகவர்களுக்கு கூடுதலாக 4 சதவீத வட்டியையும், நிலை முகவர்களுக்கு ½ சதவீத வட்டியையும் வழங்கி வந்தது. பின்னர், மாநில அரசுகள் கொடுக்கும் ஊக்க தொகையை நிறுத்திவைக்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டது. இது முகவர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. முகவர்களுக்கு இன்னும் ஊக்கத்தொகை வழங்கும் பட்சத்தில் ஏராளமான மக்களை சிறுசேமிப்பு திட்டங்களில் இணைக்கலாம் என அதிகாரி ஒருவர் கூறினார்.
கவர்ச்சிகர திட்டங்களில் மயங்கி
மோசடி நிறுவனங்களில் முதலீடு செய்தால் ஆபத்து கவர்ச்சிகர திட்டங்களை அறிவிக்கும் ஏராளமான தனியார் நிதி நிறுவனங்கள் மக்களிடம் இருந்து ஏராளமான முதலீடுகளை பெற்ற பின், திடீரென மூடுப்பட்டு விடுகின்றன. கவர்ச்சிகர திட்டங்களை நம்பி ஏமாந்தோர் திண்டுக்கல் மாவட்டத்தில் ஏராளம். திங்கள், புதன், வெள்ளி ஆகிய கிழமைகளில் மோசடி புகார்கள் தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு புகார் கொடுக்க வருகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவில் மோசடி புகார்கள் தொடர்பாக இதுவரை 117 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இன்னும் ஏராளமான புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதே பொருளாதார குற்றப்பிரிவிலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளில் அடிப்படையில் மோசடி செய்யப்பட்ட தொகைகளை கணக்கிட்டால், அது பல நூறு கோடிகளை தாண்டும் என போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

No comments:
Post a Comment