Monday, 17 November 2014

மாதாந்திர விளையாட்டு போட்டிகள் திண்டுக்கல்லில் நவ.,19 ல் துவக்கம்





திண்டுக்கல் : திண்டுக்கல்லில் நவ.,19 ல் மாதாந்திர விளையாட்டு போட்டிகள் துவங்க உள்ளது.
மாவட்ட விளையாட்டு அலுவலர் சவுந்தரராஜன் கூறியதாவது: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாதாந்திர விளையாட்டு போட்டி நவ., 19 காலை 8 மணிக்கு துவங்குகிறது. இந்த போட்டி திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடத்தப்படும். தடகள போட்டிகள் 17 வயதிற்குட்பட்டோர் மற்றும் 17 வயதிற்கு மேற்பட்டோர் என இரண்டு பிரிவுகளில் நடைபெறும். ஆண்களுக்கு100 மீ, 400 மீ, நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், தட்டு எறிதல் போட்டிகளும், பெண்களுக்கு 100 மீ, 400 மீ, 1500 மீ நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், தட்டு எறிதல் போட்டிகளும் நடத்தப்படும். நீச்சல் போட்டியில் ஆண்களுக்கு 100 மீ பிரீ ஸ்டைல், பெண்களுக்கு 200 மீ பிரீ ஸ்டைல், 100 மீ பேக் ஸ்ட்ரோக், 200 மீ பேக் ஸ்ட்ரோக் நடத்தப்படும். குழு பிரிவில் ஆண்கள், பெண்களுக்கு வாலிபால் போட்டி நடத்தப்படும். பள்ளியில் இருந்து எத்தனைபேர் வேண்டுமானாலும் பங்கேற்கலாம். தடகளம், நீச்சல் போட்டிகளில் ஒருவர் இரண்டிலும் பங்கேற்கலாம். வெற்றி பெறும் வீரர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் நவ., 18 மாலை 4 மணிக்குள் தங்கள் பெயரை பதிவு செய்ய வேண்டும். மேலும் விபரங்களுக்கு 7401703504 ல் தொடர்பு கொள்ளலாம்,' என்றார்.

No comments:

Post a Comment