திண்டுக்கல்:"" பயிர் பாதுகாப்பிற்கு அனைத்து தொடக்க வேளாண்மை மற்றும்
தனியார் உரக்கடைகளில் 3 டன் யூரியா உரம் கையிருப்பு வைக்க வேண்டும்'' என
வேளாண் தரக்கட்டுப்பாட்டுத்துறை உதவி இயக்குனர் ரவிச்சந்திரன்
வலியுறுத்தியுள்ளார்.திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் விவசாயிகள் அதிகளவு
பயன்படுத்தும் யூரியா உரம் கடந்த சில வாரங்களாக பற்றாக்குறை நிலவியது. இதை
சரிசெய்வதற்கு வேளாண் மற்றும் தரக்கட்டுப்பாட்டு துறைகள் பல்வேறு
நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. தற்போதுதனியார் உர உற்பத்தி
நிறுவனங்களான, ""மெட்ராஸ் பெர்ட்டிலைஷர் லிமிடெட் மற்றும் ஸ்பிக் உர
நிறுவனம், மங்களூர் கெமிக்கல் பெர்ட்டிலைஷர்'' ஆகியவை தினசரி 4700 டன்
யூரியா உற்பத்தி துவங்கியுள்ளது. இதனால் தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும்
நிலவும், யூரியா பற்றாக்குறை பெருமளவில் குறைந்துள்ளது.

இதனையடுத்து மாவட்டத்திலுள்ள அனைத்து உர கடைகளிலும், யூரியா உரங்களை 3 டன் அளவிற்கு அந்தந்த கடைகளில் கையிருப்பு வைக்குமாறு உரக்கடை உரிமையாளர்களுக்கும், தொடக்க வேளாண் சங்க அலுவலர்களுக்கும், வேளாண் தரக்கட்டுப்பாட்டுத்துறை வலியுறுத்தியுள்ளது.இதுகுறித்து வேளாண் தரக்கட்டுப்பாட்டுத்துறை உதவி இயக்குனர் ரவிச்சந்திரன் கூறுகையில், ""திண்டுக்கல் மாவட்டத்திற்கு இரண்டாயிரத்து 925 டன் யூரியாவும், 775 டன் டி.ஏ.பி., பொட்டாசியம் 1508 டன்னும், காம்ப்ளக்ஸ் உரங்கள் 1856 டன்னும் வரவழைக்கப்பட்டு கையிருப்பு வைக்கப்பட்டுள்ளது.
400 தனியார் கடைகளில் 800 டன் அளவிற்கு யூரியா கையிருப்பு வைத்துள்ளோம். கலெக்டர் வெங்கடாசலம் தலைமையில் நடந்த ஆய்வுகூட்டத்திற்கு பின்பு, தனியார் நிறுவனங்களில் 1200 மெட்ரிக் டன் யூரியா கையிருப்பு வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. ஒருவாரத்திற்கு தேவையான அனைத்து உரங்களும் உரக்கடைகளில் இருக்குமாறு சப்ளை செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஆயிரத்து 400 மெ., டன் யூரியா உரங்கள், 197 தொடக்க வேளாண்மை சங்கங்களிலும், தனியார் நிறுவனங்களில் 1579 மெ., டன் யூரியாவும் கையிருப்பு வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் அந்தந்த பகுதிகளிலுள்ள உரக்கடைகளில் உரங் களை வாங்கி பயனடையலாம்.'' என்றார்.

No comments:
Post a Comment