திண்டுக்கல்:பள்ளி மாணவர்களுக்கு இடையே மண்டல அளவிலான கபடி போட்டி
திண்டுக்கல் எஸ்.பி.எம்., பொறியியல் கல்லூரியில் நடந்தது. இதில்
திண்டுக்கல், தேனி மாவட்டங்களை சேர்ந்த 8 அணிகள் பங்கேற்றன. கல்லூரி
முதல்வர் பத்மநாதன் முன்னிலை வகித்தார். கல்லூரி தலைவர் ஜெயராஜ் துவக்கி
வைத்தார். 17 வயதிற்குட்பட்டோருக்கான அரையிறுதியில் உலகம்பட்டி பால்சேவியர்
பள்ளி அணி, உத்தமபாளையம் ஸ்ரீகிருஷ்ணய்யர் பள்ளியைஅணியை வென்றது. மற்றொரு
அரையிறுதியில் நெய்காரப்பட்டி குருவப்பா பள்ளி அணி, மைலாடும்பாறை
ஜி.ஆர்.வி., பள்ளி அணியை வென்றது.

மூன்றாம் இடத்திற்கான போட்டியில் உத்தமபாளையம் ஸ்ரீகிருஷ்ணய்யர் பள்ளி அணி, மைலாடும்பாறை ஜி.ஆர்.வி., பள்ளி அணியை வென்றது. இறுதிபோட்டியில் நெய்காரப்பட்டி குருவப்பா பள்ளி அணி, உலகம்பட்டி பால்சேவியர் பள்ளி அணியை வென்று முதலிடத்தை பிடித்தது.19 வயதிற்குட்பட்டோருக்கான அரையிறுதியில் கம்பம் சி.பி.எம்., பள்ளி அணி சின்னமனூர் அரசு பள்ளி அணியை வென்றது. மற்றொரு போட்டியில் சாணார்பட்டி அரசு பள்ளி அணி, நெய்காரப்பட்டி குருவப்பா பள்ளி அணியை வென்றது. மூன்றாவது இடத்திற்கான போட்டியில் சின்னமானூர் அரசு பள்ளி அணி, நெய்காரப்பட்டி குருவப்பா பள்ளி அணியை வென்றது. உடற்கல்வி இயக்குனர் சண்முகசுந்தரம் ஏற்பாடுகளை செய்திருந்தார்.

No comments:
Post a Comment