Monday, 17 November 2014

நிலக்கோட்டை மார்க்கெட்டில் பூக்கள் விலை கடும் உயர்வு "மல்லிகைப்பூ கிலோ ரூ.1,100"




நிலக்கோட்டை மார்க்கெட்டில் பூக்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மல்லிகைப்பூ கிலோ ரூ.1,100-க்கு விற்பனை செய்யப்பட்டது.

பூக்கள் விவசாயம்

திண்டுக்கல் மாவட்டம் நிலக¢கோட்டை சுற்றுவட்டார பகுதிகளான குரும்பபட்டி, பிள்ளையார்நத்தம், எத்திலோடு, கவுண்டன்பட்டி, மைக¢கேல்பாளையம், கோட்டுர், சிலுக¢குவார்பட்டி, கொடைரோடு உள்பட அனைத்து பகுதிகளிலும் பெருமளவு மல்லிகை, முல்லை, கனகாம்பரம், பிச்சிபூ, துளசி ஆகியவை விவசாயம் செய்யப்படுகிறது. அதனால் நிலக¢கோட்டையில் பெரிய அளவிலான பூ மார்க்கெட் இயங்கி வருகிறது.

நிலக்கோட்டையில் இருந்து கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களுக¢கும், சிங்கப்பூர், மலேசியா, துபாய் போன்ற வெளிநாடுகளுக¢கும் பூக¢கள் ஏற்றுமதியாகிறது. கடந்த சில ஆண்டுகளாக பருவமழை பொய்த்து போனதால் நிலக¢கோட்டை பகுதிகளில் பூச்செடிகள் காய்ந்து போனது. இதனால் விவசாயிகள் பெருமளவு நஷ்டமடைந்தனர்.

விலை உயர்வு

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக¢கு முன்பு பருவமழை பெய்ததால் பூச்செடிகள் அனைத்தும் மீண்டும் வளர்ந்து அதிக அளவில் பூக¢கள் பூக¢க ஆரம்பித்தது. இதனால் பூ மார்க்கெட்டிற்கு அதிகமான பூக¢கள் வரத்து இருந்ததால் பூக¢களின் விலை கடும் சரிவை சந்தித்தது. இதனால் விவசாயிகளும், வியாபாரிகளும் கவலையில் ஆழ்ந்தனர். கடந்த ஒரு வாரமாக நிலக¢கோட்டை பகுதியில் மாலை 6 மணிக¢கெல்லாம் கடும் பனிப்பொழிவு ஆரம்பித்து விடுகிறது.

இந்த பனிப்பொழிவு காலை 8 மணி வரை நீடிப்பதால் பொதுமக¢கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் நிலக¢கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் மழையால் அதிக அளவில் பூ பூத்த செடிகள் அனைத்தும் இந்த கடும் பனிப்பொழிவால் அழுக ஆரம்பித்து விட்டது. தற்போது மார்க்கெட்டிற்கு வரும் அனைத்து வகையான பூக¢¢களின் வரத்தும் குறைந்து விட்டது. இதனால் வரலாறு காணாத வகையில் பூக¢களின் விலை உயர்ந்துள்ளது.

கடந்த 15 நாட்களுக¢கு முன்பு கிலோ ரூ.20-க¢கு விற்பனை செய்யப்பட்ட மல்லிகைப்பூ தற்போது ரூ.1,100-க¢கும், ரூ.300-க¢கு விற்பனையான கனகாம்பரம் ரூ.1,500-க¢கும், ரூ.30-க¢கு விற்பனையான முல்லைப்பூ ரூ.1,000-க¢கும், ரூ.80-க¢கு விற்பனையான பிச்சிப்பூ ரூ.700-க¢கும், ரூ.25-க¢கு விற்பனையான ரோஜாப்பூ ரூ.150-க¢கும் விற்பனையானது. 

No comments:

Post a Comment