திண்டுக்கல்,
திண்டுக்கல் மாநகராட்சிக்கு வரவேண்டிய குடிநீர், வீட்டு வரி உள்பட ரூ.19 கோடி வருவாய் நிலுவை இருக்கிறது.
குடிநீர் வரி பாக்கி
திண்டுக்கல் மாநகராட்சிக்கு வீட்டு வரி, குடிநீர் இணைப்பு, தொழில்வரி, கடை வாடகை, குத்தகை கட்டணம் என பல்வேறு வகையில் வருமானம் கிடைக்கிறது. அந்த வகையில் ஆண்டு தோறும் ரூ.30 கோடிக்கு மேல் மாநகராட்சிக்கு வருமானம் வருவது குறிப்பிடத்தக்கது. இதனை வசூல் செய்ய தனியாக அதிகாரிகளும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
எனினும், மாநகராட்சி வரவேண்டிய வரி, வாடகை கட்டணங்கள் வசூல் ஆகாமல் நிலுவையில் இருக்கிறது. இதில் குடிநீர் இணைப்பை பொறுத்தவரை வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு மொத்தம் 28 ஆயிரத்து 446 இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளது. ஆனால், ரூ.3 கோடியே 20 லட்சம் குடிநீர் வரி வசூல் செய்யப்படாமல் உள்ளது.
மேலும் ஆத்தூர் காமராஜர் அணையில் இருந்து திண்டுக் கல் நகருக்கு குடிநீர் கொண்டு வரப்படும் பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கும் குடிநீர் கொடுக்கப்படுகிறது. இந்த வழியோர கிராமங்கள் மாநகராட்சி நிர்வாகத்திற்கு குடிநீர் கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால், ரூ.1 கோடியே 70 லட்சம் அளவுக்கு வழியோர கிராமங்கள் சார்பில் குடிநீர் கட்டணத்தை செலுத்தப்படவில்லை.
வீட்டு வரி ரூ.6½ கோடி
இதற்கெல்லாம் மேல் மாநகராட்சிக்கு முக்கிய வருவாயான வீட்டு வரியும் சரியாக வசூல் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. திண்டுக்கல் மாநகராட்சிக்கு தற்போதைய நிலவரப்படி ரூ.6½ கோடி வீட்டு வரி வசூலாகாமல் நிலுவையில் இருக்கின்றன. மேலும் காலியிட வரி ரூ.24½ லட்சமும், தொழில் வரி ரூ.1¼ கோடியும் மாநகராட்சிக்கு செலுத்தப்பட வில்லை.
அதேபோல் திண்டுக்கல் பஸ் நிலையம், மாநகராட்சி வணிக வளாகத்தில் உள்ள கடைகள், வாரச்சந்தை, தினசரி சந்தை கடைகள், குத்தகை தொகைகள் என ரூ.6½ கோடி வரை செலுத்தப்படாமல் இருக்கிறது. இதில் திண்டுக்கல் பஸ் நிலையத்தில் உள்ள கடைகளில் மட்டும் ரூ.70 லட்சம் வாடகை பாக்கி இருப்பதாக கூறப்படுகிறது.
மொத்தம் ரூ.19 கோடி
ஒட்டுமொத்தமாக திண்டுக்கல் மாநகராட்சிக்கு வரவேண்டிய வருவாய் சுமார் 19 கோடி ரூபாய் வசூல் ஆகாமல் நிலுவையில் இருக்கிறது. இந்த தொகையை முழுமையாக வசூல் செய்தால் மாநகராட்சி பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பல்வேறு வசதிகளை செய்து கொடுக்கலாம். மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருவாயை வசூல் செய்வார்களா?.

No comments:
Post a Comment