சின்னாளபட்டி,
அதிக “வேர்” உள்ள செடிகளை நட்டு வளர்ப்பதன் மூலம் கொடைக்கானல் “டம் டம்” பாறை பகுதியில் தொடர்ந்து ஏற்படும் நிலச்சரிவை தடுக்கலாம் என்று புவி அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் யோசனை தெரிவித்துள்ளனர்.
நிலச்சரிவு
திண்டுக்கல் மாவட்டத்தின் கோடை வாசஸ்தலமான கொடைக்கானல் செல்லும் வழியில் கடந்த வாரம் பெய்த பலத்த மழையால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு சாலை துண்டிக்கப்பட்டது. குறிப்பாக ‘டம் டம்’ பாறை மலைச்சாலை பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு அதிகளவு பாதிப்பை ஏற்படுத்தியது.
இந்த பகுதியில் நிலச்சரிவு ஏன் ஏற்படுகிறது என்பதை ஆய்வு செய்வதற்காக காந்திகிராம பல்கலைக் கழகத்தில் செயல்படும் புவி அறிவியல் மைய பேராசிரியர் குருஞானம், மற்றும் ஆய்வு மாணவர்கள் இணைந்து ஜி.பி.எஸ். என்னும் கருவியின் உதவியுடன் ஆய்வை மேற்கொண்டனர்.
இந்த ஆய்வு குறித்து பேராசிரியர் குருஞானம் தினத்தந்தி நிருபரிடம் கூறியதாவது:-
காரணங்கள்
நாங்கள் 3 அடிப்படையில் ஆய்வு மேற்கொண்டோம். அதில் ஒன்று இப்பகுதியில் வலுவிழந்த பாறைகள், மண்ணின் தடிமன்கள், வானிலை மாற்றத்தால் அதிர்தல், இணைப்பு பிளவு தன்மை, பாறை அடுக்கு பாறை ஒன்றுக்கொன்று நகர்ந்திருத்தல், பாறைக்குள் துகள், பாறையில் ஒன்றுக்கொன்று துகள் இணைப்பு ஆகியவையும், இரண்டாவதாக அங்குள்ள நில அமைப்பின் விளைவு, அப்பகுதியில் உள்ள மரம், செடிகள் உள்ளிட்ட தாவரங்களின் அமைப்பு மற்றும் தன்மை ஆகியவையும், 3-வதாக மனிதர்களால் ஏற்பட்ட காரணங்களான சரிவான நில அமைப்பாக மாற்றுவது, அதிக சுமையை கொடுப்பது, இயற்கை தாவரங்களை அழித்தல் ஆகியவைகளால் தான் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறிந்தோம்.
மேலும், இப்பகுதியில் குவார்ட்ஸ்ட் கல், சார்னோ கைட் மற்றும் மைக்கா போன்ற கடினமான பாறைகள் இருந்தாலும் காட்டாற்று வெள்ளம் வரும்போது இந்த 3 காரணங்களாலும், பாறையில் இருந்த பிளவுகளில் தண்ணீர் புகுந்து பீச்சி அடிப்பதால் 7 அடி முதல் 30 அடிவரை நிலங்கள் சரிந்துள்ளது. இப்படியாக ‘டம், டம்‘ பாறை பகுதியில் மட்டும் இதுவரை 110 முறை நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது.
இதுபோன்று தொடர்ந்து நடைபெறும் நிலச்சரிவை தடுக்க வேண்டும் என்றால், இப்பகுதியில் அதிக வேகம் உள்ள நீரோடை பகுதிகளிலும், வலுவிழந்த பாறைகள், மண் பாறைகளின் ஓரத்தில் சுவர்கள் அமைக்க வேண்டும். சிறிய சிறிய மண் சரிவுகள் உள்ள இடங்களில் வளைவுகளை அமைத்து தடுக்க வேண்டும். இதற்கெல்லாம் மேலாக இப்பகுதிகளில் அதிக வேர் உள்ள செடி வகைகளை வளர்த்தால் நிலச்சரிவை தடுக்கலாம்.
இவ்வாறு காந்திகிராம பல்கலைக்கழக புவி அறிவியல் பேராசிரியர் குருஞானம் தெரிவித்தார்.

No comments:
Post a Comment